ராகி முட்டை சேமியா
தேவையான பொருட்கள் :
ராகி சேமியா - 1 பாக்கெட்
வெங்காயம் - 1
முட்டை - 1
முந்திரி - 6
இஞ்சிபூண்டு விழுது - 1/2 ஸ்பூன்
கடுகு - 1/2 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன்
வரமிளகாய் - 2
கறிவேப்பிலை - 1 கொத்து
மிளகு தூள் - 1 ஸ்பூன்
உப்பு - 1 ஸ்பூன்
நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
1. ராகி சேமியாவை பாக்கெட்டில் கூறியுள்ளபடி வேக வைத்து உதிர்த்து வைத்து கொள்ளவும்.
2. வெங்காயம், முந்திரியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
3. பானில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
4. வெங்காயம் வதங்கியதும் முந்திரி, இஞ்சிபூண்டு விழுது, உப்பு சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
5. பின்னர் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி, மிளகு தூள் தூவி நன்கு கொத்தி விடவும்.
6. அதில் வேக வைத்துள்ள ராகி சேமியாவை சேர்த்து நன்கு கலந்து விடவும். 2 நிமிடம் கழித்து இறக்கவும்.
ஆரோக்கியமான ராகி முட்டை சேமியா 15 நிமிடத்தில் தயார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...