நெத்திலி கருவாடு பொரியல் 


நெத்திலி கருவாடு பொரியல் 

தேவையான பொருட்கள் : 

நெத்திலி கருவாடு - 100 கிராம்

வெங்காயம் - 1 

மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்

மிளகாய் தூள் - 1 ஸ்பூன் 

சாம்பார் பொடி - 1/2 ஸ்பூன்

கடுகு - 1/2 ஸ்பூன்

உப்பு - 1/2 ஸ்பூன் 

கறிவேப்பிலை - 1 கொத்து 

கடலை எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை : 

1. நெத்திலி கருவாடை நன்கு அலசி சுத்தம் செய்து வைத்து கொள்ளவும். வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கி வைக்கவும். 


2. பானில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடித்ததும் கருவாடு, தூள் வகைகள், உப்பு சேர்த்து வதக்கவும். 




3. 1/4 கப் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேக விடவும். 


4. தண்ணீர் வற்றி கருவாடு வெந்ததும் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பிரட்டி விடவும்.  


5. வெங்காயம் நன்கு முறுகலாக வரும்பொழுது அடுப்பை அணைக்கவும். 


ருசியான நெத்திலி கருவாடு பொரியல் தயார்.    




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes