வாழைத்தண்டு பொரியல் 

வாழைத்தண்டு பொரியல் 

தேவையான பொருட்கள் : 

வாழைத்தண்டு - 1 

வெங்காயம் - 1 

பச்சை மிளகாய் - 1

மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன் 

பெருஞ்சீரகத் தூள் - 1/2 ஸ்பூன் 

உப்பு - 3/4 ஸ்பூன் 

தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன் 

கடுகு - 1/4 ஸ்பூன்

வரமிளகாய் - 2 

உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன் 

கறிவேப்பிலை - 1 கொத்து

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் 

செய்முறை : 

1. வாழைத்தண்டை நார் இல்லாமல் பொடியாக நறுக்கி உப்பு கலந்த நீரில் போட்டு கொள்ளவும். 

 2. வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கி கொள்ளவும். தேங்காய் துருவலுடன் பச்சை மிளகாய் சேர்த்து மிக்சியில் கொரகொரப்பாக அரைத்து வைக்கவும். 

3. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வரமிளகாய், உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். 


4. வெங்காயம் வதங்கியதும் வாழைத்தண்டை வடிகட்டி சேர்க்கவும். 

5. தூள் வகைகள், உப்பு சேர்த்து கலந்து விட்டு மூடி போட்டு வேக விடவும்.

 6. வாழைத்தண்டு வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து கலந்து விட்டு அடுப்பை   அணைக்கவும். 


 சுவையான வாழைத்தண்டு பொரியல் தயார்.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes