பராசப்பம்

பராசப்பம்

தேவையான பொருட்கள்

ஆப்ப மாவு - 3 கப் 

தேங்காய் துருவல் - 1 கப்

முட்டை - 1 

வெங்காயம் - 1 

பச்சை மிளகாய் - 2 

மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்

பெருஞ்சீரக தூள் - 1/2 ஸ்பூன் 

உப்பு - 1 ஸ்பூன்

சீனி - 1/2 ஸ்பூன்

எண்ணெய் + நெய் - 1/4 கப்

செய்முறை

1. ஆப்ப மாவுடன் சீனி, 1/2 ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும். 

2. மிக்சியில் தேங்காயுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து ஒரு சுற்று சுற்றவும். 



3. பின்னர் அதனுடன் முட்டை, தூள் வகைகள், உப்பு சேர்த்து தண்ணீர் இல்லாமல் அரைத்து கொள்ளவும்.


4. அரைத்த விழுதை ஆப்ப மாவுடன் சேர்த்து கலந்து விடவும். 


5. தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி எண்ணெய், நெய் கலவையை சுற்றிலும் ஊற்றவும். மூடி போட்டு வேக விடவும். 


6. இருபுறமும் சிவந்ததும் எடுக்கவும். 

ருசியான பராசப்பம் தயார். மட்டன் க்ரேவி, சிக்கன் க்ரேவியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

பெருநாள் விருந்திலும், திருமணம் போன்ற விருந்துகளிலும் பராசப்பம் கண்டிப்பாக இருக்கும். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes