வெண் பொங்கல்
தேவையான பொருட்கள் : பச்சரிசி - 1 கப்
பாசிப்பருப்பு - 1/4 கப்
மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறிது
முந்திரி - 10
கறிவேப்பிலை - 1 கொத்து
பெருங்காய தூள் - 1/4 ஸ்பூன்
உப்பு - 3/4 ஸ்பூன்
நெய் - 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
1. அரிசியையும் பருப்பையும் களைந்து 30 நிமிடம் ஊற வைக்கவும். பின்பு குக்கரில் அரிசி பருப்புடன் உப்பு சேர்த்து 3 கப் தண்ணீர் சேர்த்து 3 விசில் வைக்கவும்.
3. அரிசி குழைய வெந்ததும் சிறிது தண்ணீர் சேர்த்து பொங்கல் பதத்திற்கு வைக்கவும்.
4. ஒரு பானில் நெய் விட்டு சூடானதும் மிளகு, சீரகம், கீறிய பச்சை மிளகாய், முந்திரி, இஞ்சி, பெருங்காய தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பொங்கல் கொட்டி கலந்து விடவும்.
சுவையான எளிதில் செய்ய கூடிய வெண் பொங்கல் தயார். சட்னியுடன் பரிமாறவும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...