இடியாப்ப சோறு 


இடியாப்ப சோறு 

தேவையான பொருட்கள் :

இடியாப்பம் - 4

பால் - 1/4 கப்

முந்திரி - 6

முட்டை - 1

மிளகு தூள் - 1/2 ஸ்பூன்

உப்பு - 1/4 ஸ்பூன்

நெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

* ஒரு பவுலில் இடியாப்பத்தை நன்றாக உதிர்த்து வைத்து கொள்ளவும்.


* காய்ச்சிய பாலை அதில் சேர்த்து நன்கு பிசிறி வைக்கவும்.

* பானில் நெய் விட்டு சூடானதும் உடைத்த முந்திரியை போடவும். 

* பின்னர் அதில் முட்டையை உடைத்து ஊற்றி மிளகு தூள், உப்பு சேர்த்து கொத்தி விடவும்.




* இடியாப்பத்தை அதில் சேர்த்து நன்கு கிளறி விட்டு இறக்கவும்.



 சுவையான இடியாப்ப சோறு தயார்.


இது இஸ்லாமிய இல்லங்களில் செய்யப்படும் ஒரு பாரம்பரிய உணவாகும்.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes