மஷ்ரூம் மசாலா
தேவையான பொருட்கள் :
மஷ்ரூம் - 1 பாக்கெட்
வெங்காயம் - 1
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
பட்டை - 1 துண்டு
கிராம்பு, ஏலக்காய் - 2
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மிளகு தூள் - 1 ஸ்பூன்
சீரக தூள் - 1/2 ஸ்பூன்
கரமசாலா தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - 1 ஸ்பூன்
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
புதினா - சிறிது
செய்முறை :
1. மஷ்ரூமை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். தக்காளியை விழுதாக அரைத்து கொள்ளவும். வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கி வைக்கவும்.
2. பானில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
3. வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போனதும் மஷ்ரூம் சேர்க்கவும்.
4. தூள் வகைகள் சேர்த்து மசாலா வாசம் போனதும் தக்காளி விழுது சேர்த்து கலந்து விடவும்.
5. மசாலாவில் எண்ணெய் பிரிந்து வரும் பொழுது புதினா, சிறிது மிளகு தூள் சேர்த்து பிரட்டி விட்டு இறக்கவும்.
ஸ்பைசி மஷ்ரூம் மசாலா தயார்.
ரெஸ்டாரன்ட் சுவையில் வீட்டிலேயே சுலபமாக செய்து அசத்தலாம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...