குழம்பு வகைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குழம்பு வகைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பூண்டு குழம்பு 

0 கருத்துகள்


 பூண்டு குழம்பு 

தேவையான பொருட்கள் : 

பூண்டு - 20 பல் 

சின்ன வெங்காயம் - 10 

தக்காளி - 1

பச்சை மிளகாய் - 2 

மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன் 

மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

சாம்பார் பொடி - 1 டேபிள் ஸ்பூன்

உப்பு - 3/4 ஸ்பூன் 

கறிவடகம் - 1 ஸ்பூன் 

கறிவேப்பிலை - 1 கொத்து 

நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை : 

1. பூண்டை தோல் உரித்து வைக்கவும். சின்ன வெங்காயத்தை சதுரமாக நறுக்கவும். தக்காளியை மெல்லியதாகவும், மிளகாயை நடுவில் கீறியும் வைக்கவும். 

2. பானில் எண்ணெய் விட்டு சூடானதும் கறிவடகம், கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும். 


3. வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். 


4. பின்னர் தூள் வகைகள் சேர்த்து பிரட்டி விடவும். 1 கப் தண்ணீர் சேர்த்து கலந்து விடவும்.





5. குழம்பு கொதித்து மசாலா வாசம் போனதும் 5 நிமிடம் சிம்மில் வைத்து குழம்பை இறக்கவும்.


6. எண்ணெய் பிரிந்து பூண்டு குழம்பு மணமாக இருக்கும். 

ருசியான பூண்டு குழம்பு தயார். 





 மோர் குழம்பு

0 கருத்துகள்



மோர் குழம்பு 

 தேவையான பொருட்கள்: 


  தயிர் - 1 கப்
 தேங்காய் - 1/2 கப்
 பச்சை மிளகாய் - 2
 சீரகம் - 1 ஸ்பூன்
 அரிசி - 2 ஸ்பூன்
 துவரம் பருப்பு - 2 ஸ்பூன்
 மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
 உப்பு - 1 ஸ்பூன்

 தாளிக்க:

 கடுகு - 1 ஸ்பூன்
 கறிவடகம் - 1 ஸ்பூன்
 வரமிளகாய் - 2
 கறிவேப்பிலை - 1 கொத்து
 நல்லெண்ணை - 1 ஸ்பூன்     

செய்முறை

1. அரிசி, பருப்பை 1/2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். 




2. மிக்சியில் அரிசி பருப்புடன் தேங்காய், சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து         கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். 



3. தயிருடன் 1 கப் தண்ணீர், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து கொள்ளவும். 



4.அதனுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையையும் சேர்த்து திக்காக குழம்பு பதத்திற்கு கலந்து அடுப்பில் வைக்கவும். 



5. குழம்பு நுரைத்து வந்ததும் தாளிக்க குடுத்துள்ள பொருட்களை தாளித்து மோர் குழம்பில் சேர்க்கவும். 




 சுவையான மோர் குழம்பு தயார்.   



 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes