வெஜ் சமையல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெஜ் சமையல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வாழைப்பூ வடை 

0 கருத்துகள்


 வாழைப்பூ வடை 

தேவையான பொருட்கள் : 

வாழைப்பூ - 1/2 

கடலை பருப்பு - 1 கப் 

வெங்காயம் - 1 

இஞ்சிபூண்டு விழுது - 1 ஸ்பூன் 

வரமிளகாய் - 4

சோம்பு - 1 ஸ்பூன் 

மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன் 

உப்பு - 3/4 ஸ்பூன் 

கறிவேப்பிலை - 1 கொத்து

எண்ணெய் - 1/4 லிட்டர் 

செய்முறை :

1. வாழைப்பூவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும். 

2. கடலை பருப்பை 3 மணி நேரம் ஊற வைத்து வடிகட்டி வைக்கவும். வெங்காயம், கறிவேப்பிலை பொடியாக நறுக்கி கொள்ளவும். 


3. மிக்சியில் வரமிளகாய், சோம்பு சேர்த்து 1 சுற்று பல்சில் அரைக்கவும். பின்னர் அதனுடன் கடலை பருப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.


4. அதனுடன் வாழைப்பூ சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளவும்.

5. வாழைப்பூ கலவையுடன் வெங்காயம், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், உப்பு, இஞ்சிபூண்டு விழுது சேர்த்து நன்கு பிசிறி கொள்ளவும். 



6. கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் மாவை வடைகளாக தட்டி போட்டு இருபுறமும் சிவந்ததும் எடுக்கவும். 


சுவையான வாழைப்பூ வடை தயார். 



பட்டாணி குருமா - 2

0 கருத்துகள்

  பட்டாணி குருமா - 2

தேவையான பொருட்கள்:

வெங்காயம் - 2
தக்காளி - 2
பட்டாணி - 1 கப் 
வேகவைத்த உருளை - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சிபூண்டு விழுது - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
சீரக தூள் - 1/2 ஸ்பூன்
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
கரமசாலா தூள் - 1/2 ஸ்பூன்  
உப்பு - 1 ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 1
முந்திரி - 6 
தேங்காய் துருவல் - 1/2 கப்
மல்லிதழை - சிறிது

செய்முறை : 

 1. பட்டாணியை 6 மணி நேரம் ஊற வைத்து குக்கரில் 2 விசில் வரும் வரை வேக விடவும்.


 2. வெங்காயம், தக்காளியை மெல்லியதாக நறுக்கி கொள்ளவும். மிளகாயை     நடுவில் கீறி வைக்கவும். 

3.முந்திரியை தேங்காயுடன் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும். 


4. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளித்து வெங்காயம், மிளகாய் சேர்த்து வதக்கவும்.


5. பின்னர் இஞ்சிபூண்டு விழுது, உப்பு சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். 


6.  தக்காளி சேர்த்து குழைய வதங்கியதும்  அதனுடன் வேக வைத்த பட்டாணி, உருளையை சேர்க்கவும்.



7. தூள் வகைகள்  சேர்த்து பிரட்டிவிடவும். அரைத்து வைத்த முந்திரி விழுதை சேர்க்கவும்.



8. அத்துடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கலந்து நன்கு கொதிக்க விடவும்.



9. குருமா எண்ணெய் பிரிந்து வந்ததும் மல்லிதழை தூவி விடவும்.



சுவையான எளிதில் செய்யகூடிய பட்டாணி குருமா தயார்..



சப்பாத்தி, பரோட்டா, இடியாப்பம் உடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

* ஃப்ரோசன் பட்டாணி பயன்படுத்தினால் வேக வைக்க தேவை இல்லை.

கட்டு சோறு

0 கருத்துகள்


கட்டு சோறு

தேவையான பொருட்கள் : 

அரிசி - 2 கப் 
புளி - எலுமிச்சை அளவு 
தேங்காய் - 1 
உப்பு - 2 ஸ்பூன்

தாளிக்க : 

கடுகு - 2 ஸ்பூன் 
வரமிளகாய் - 4 
கறிவடகம் - 2 டேபிள் ஸ்பூன் 
கறிவேப்பிலை - 2 கொத்து
நல்லெண்ணெய் - 1/2 கப்   

செய்முறை : 

1. அரிசியை களைந்து 1 ஸ்பூன் உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வடித்து வைக்கவும் அல்லது குக்கரிலும் சோறாக ஆக்கி கொள்ளவும். 
2. புளியை ஒரு மணி நேரம் ஊற வைத்து ஒரு கப் அளவிற்கு சாறு எடுத்து கொள்ளவும். 


3. தேங்காயை பிழிந்து பால் எடுத்து வைக்கவும். 




4. ஒரு பாத்திரத்தில் புளி தண்ணீர், தேங்காய்ப்பால், 1 ஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு கலந்து வைத்து கொள்ளவும். 

5. கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, வரமிளகாய், கறிவடகம், கறிவேப்பிலை தாளித்து புளி கலவையை சேர்க்கவும்.





6. 5 நிமிடத்தில் நுரைத்து வரும் பொழுது அடுப்பை அணைக்கவும். 


7. பின்னர் சோறை அதனுடன் நன்கு கலந்து விட்டு 30 நிமிடம் மூடி வைத்து பின்னர் பரிமாறவும்.


 சுவையான கட்டு சோறு தயார். 


இது ஒரு பாரம்பரிய உணவாகும். சிலர் இதில் மஞ்சள் தூள் சேர்ப்பார்கள். ஆனால் எங்கள் வீட்டு செய்முறை இது தான்.

 விருப்பமான தொடுகறிகளுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

 மதியம் செய்து இரவில் சாப்பிடும் பொழுது இன்னும் சுவை கூடும்.  

பச்சை பட்டாணி க்ரேவி

0 கருத்துகள்


பச்சை பட்டாணி க்ரேவி

தேவையான பொருட்கள் :
 
பச்சை பட்டாணி - 1 கப்
வெங்காயம் - 2 
தக்காளி - 2 
பச்சை மிளகாய் - 2 
இஞ்சிபூண்டு விழுது - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன் 
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன் 
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
சீரக தூள் - 1/2 ஸ்பூன் 
உப்பு - 3/4 ஸ்பூன்
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
சோம்பு - 1/2 ஸ்பூன் 
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் 
புதினா - சிறிதளவு 

செய்முறை : 

1. வெங்காயம், தக்காளியை மெல்லியதாக அரிந்து கொள்ளவும். மிளகாயை நடுவில் கீறி வைக்கவும். 



2. பானில் எண்ணெய் விட்டு சூடானதும் சோம்பு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும்.



3. வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போனதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். 






 4. பின்னர் தூள் வகைகள் சேர்க்கவும். தூள் வாசம் போனதும் பச்சை பட்டாணியை சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.




 5. பட்டாணி மசாலாவுடன் தயிர் சேர்க்கவும். 1/2 கப் தண்ணீர் சேர்த்து கலந்து விடவும். பட்டாணி வெந்து தண்ணீர் சுண்டியதும் புதினா தூவி பிரட்டி விடவும். 





 எளிதில் செய்ய கூடிய ருசியான பச்சை பட்டாணி க்ரேவி தயார்.

 சப்பாத்தி, ப்ரெட்டுடன் சேர்ந்து சாப்பிட சுவையாக இருக்கும்.  


 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes