வெரைட்டி ரைஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெரைட்டி ரைஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நெய் சோறு

0 கருத்துகள்


நெய் சோறு

தேவையான பொருட்கள் : 


புலாவ் அரிசி - 2 கப்

வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
பட்டை - 2 துண்டு
கிராம்பு, ஏலம் - தலா 2
மல்லி, புதினா - 1/2 கப்
பாண்டான் இலை - 2 துண்டு 
இஞ்சிபூண்டு விழுது - 2 ஸ்பூன்
தயிர் - 1/2 கப்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - 1 ஸ்பூன்
நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை : 


1. அரிசியை களைந்து 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்.


2. வெங்காயம், தக்காளியை மெல்லியதாக நறுக்கி கொள்ளவும். மிளகாயை நடுவில் கீறி வைக்கவும்.


3. அரிசியை 3 கப் நீர், உப்பு சேர்த்து எலக்ட்ரிக் குக்கரில் கொதிக்க விடவும். 
4. பானில் எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலம், பாண்டான் இலை தாளித்து வெங்காயம், தக்காளி, மிளகாய், மல்லி, புதினா சேர்த்து வதக்கவும்.




5. இஞ்சிபூண்டு சேர்த்து வதக்கி பச்சை வாசம் போனதும் தயிர் சேர்க்கவும்.




6. இதனை அரிசியில் கொட்டி நன்கு கலந்து விடவும். 20 நிமிடத்தில் சோறு வெந்து விடும்.



மணமான நெய் சோறு தயார்.


இதனை தால்ச்சா அல்லது சிக்கன், மட்டன் குழம்பு வகைகளுடன் சாப்பிடலாம்.


சைவம் விரும்புவர்கள் வெஜ் குருமாவுடன் சாப்பிட்டாலும் நன்றாக இருக்கும்.

சன்னா தால் புலாவ் 

0 கருத்துகள்


சன்னா தால் புலாவ் 

தேவையான பொருட்கள் : 

பிரியாணி அரிசி - 1 கப் 

சன்னா தால் / கடலை பருப்பு- 1/4 கப் 

வெங்காயம் - 1

தக்காளி - 1 

பச்சை மிளகாய் - 2 

கேரட் - 1/2 

புதினா - சிறிதளவு 

இஞ்சிபூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன் 

மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்

மிளகு தூள் - 1/2 ஸ்பூன்

சீரக தூள் - 1/2 ஸ்பூன்

உப்பு - 3/4 ஸ்பூன்

தயிர் - 2 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் 

பட்டை - 1 துண்டு 

கிராம்பு, ஏலக்காய் - 2

செய்முறை : 

1. வெங்காயம், கேரட், தக்காளியை மெல்லியதாக நறுக்கி கொள்ளவும். மிளகாயை நடுவில் கீறி வைக்கவும். 

2. அரிசி, பருப்பை கழுவி விட்டு 20 நிமிடம் ஊற வைக்கவும். 

3. குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். 

4. வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு விழுது, உப்பு சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். 

5. பின்னர் தக்காளி, கேரட் சேர்த்து வதக்கவும். 

6. தூள் வகைகள், தயிர் சேர்த்து பிரட்டி விடவும். 


7. அத்துடன் 2 கப் தண்ணீர் புதினா சேர்த்து கொதி வந்ததும் அரிசி, பருப்பை சேர்த்து மூடி போட்டு 2 விசில் வைத்து இறக்கவும். 


சுலபமாக செய்யகூடிய சன்னா தால் புலாவ் தயார். 

விருப்பமான தொடுகறிகளுடன் சுவைக்கலாம். 

லன்ச் பாக்ஸிற்கு ஏற்ற உணவாக இருக்கும். 

சிக்கன் ஃப்ரைட் ரைஸ்

0 கருத்துகள்


சிக்கன் ஃப்ரைட் ரைஸ்

தேவையான பொருட்கள் : 

பாஸ்மதி அரிசி (வேக வைத்தது) - 2 கப்

போன்லெஸ் சிக்கன் - 250 கிராம் 

முட்டை - 2 

இஞ்சிபூண்டு விழுது - 2 ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன் 

மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன் 

பீன்ஸ் - 100 கிராம் 

கேரட் - 100 கிராம்

மிளகு தூள் - 1 ஸ்பூன்

சீரக தூள் - 1 ஸ்பூன்

உப்பு - 1 ஸ்பூன் 

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்  

செய்முறை

1. சிக்கனை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பீன்ஸ், கேரட்டை பொடியாக நறுக்கி வைக்கவும். 

2. பானில் எண்ணெய் விட்டு சூடானதும் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கொத்தி எடுத்து கொள்ளவும். 

3. பின்னர் அதிலேயே சிக்கன் துண்டுகள், இஞ்சிபூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சிறிது உப்பு சேர்த்து நன்கு வறுத்து எடுத்து கொள்ளவும். 


4. அதே பானில் காய்கறிகளை சிறிது உப்பு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். 



5. மிளகு தூள், சீரக தூள் சேர்த்து பிரட்டி விடவும். 


6. வேக வைத்த அரிசியை சேர்த்து பிரட்டி விடவும். 


7. கடைசியாக சிக்கன் துண்டுகள், முட்டை சேர்த்து நன்கு கலந்து விட்டு பொலபொலவென்று வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும். 


சுவையான சிக்கன் ஃப்ரைட் ரைஸ் தயார். ரெஸ்டாரன்ட் சுவையில் அருமையாக இருக்கும்.


* என்னிடம் ஸ்ப்ரிங் ஆனியன் இல்லாததால் சேர்க்கவில்லை. அதனை பொடியாக நறுக்கி கடைசியில் சேர்க்கவும்.  

கட்டு சோறு

0 கருத்துகள்


கட்டு சோறு

தேவையான பொருட்கள் : 

அரிசி - 2 கப் 
புளி - எலுமிச்சை அளவு 
தேங்காய் - 1 
உப்பு - 2 ஸ்பூன்

தாளிக்க : 

கடுகு - 2 ஸ்பூன் 
வரமிளகாய் - 4 
கறிவடகம் - 2 டேபிள் ஸ்பூன் 
கறிவேப்பிலை - 2 கொத்து
நல்லெண்ணெய் - 1/2 கப்   

செய்முறை : 

1. அரிசியை களைந்து 1 ஸ்பூன் உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வடித்து வைக்கவும் அல்லது குக்கரிலும் சோறாக ஆக்கி கொள்ளவும். 
2. புளியை ஒரு மணி நேரம் ஊற வைத்து ஒரு கப் அளவிற்கு சாறு எடுத்து கொள்ளவும். 


3. தேங்காயை பிழிந்து பால் எடுத்து வைக்கவும். 




4. ஒரு பாத்திரத்தில் புளி தண்ணீர், தேங்காய்ப்பால், 1 ஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு கலந்து வைத்து கொள்ளவும். 

5. கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, வரமிளகாய், கறிவடகம், கறிவேப்பிலை தாளித்து புளி கலவையை சேர்க்கவும்.





6. 5 நிமிடத்தில் நுரைத்து வரும் பொழுது அடுப்பை அணைக்கவும். 


7. பின்னர் சோறை அதனுடன் நன்கு கலந்து விட்டு 30 நிமிடம் மூடி வைத்து பின்னர் பரிமாறவும்.


 சுவையான கட்டு சோறு தயார். 


இது ஒரு பாரம்பரிய உணவாகும். சிலர் இதில் மஞ்சள் தூள் சேர்ப்பார்கள். ஆனால் எங்கள் வீட்டு செய்முறை இது தான்.

 விருப்பமான தொடுகறிகளுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

 மதியம் செய்து இரவில் சாப்பிடும் பொழுது இன்னும் சுவை கூடும்.  

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes