மீன் வகைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மீன் வகைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மீன் வறுவல் 

0 கருத்துகள்

 மீன் வறுவல் 

தேவையான பொருட்கள் :  

கொடுவா மீன் - 1/2 கிலோ

மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன் 

மிளகாய் தூள் - 2 ஸ்பூன் 

மல்லி தூள் - 2 ஸ்பூன் 

சீரக தூள் - 1/2 ஸ்பூன் 

உப்பு - 1 ஸ்பூன் 

இஞ்சிபூண்டு விழுது - 2 ஸ்பூன் 

எண்ணெய் - 1 கப்

செய்முறை :

1. மீனை சுத்தம் செய்து உப்பு சேர்த்து நன்கு அலசி கொள்ளவும். 

2. ஒரு பவுலில் தூள் வகைகள், உப்பு, இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பிசிறி வைக்கவும்.



3. அதனுடன் மீன் துண்டுகள் சேர்த்து கலந்து விட்டு 1 மணி நேரம் ஊற விடவும்.



4. பானில் எண்ணெய் விட்டு சூடானதும் மீன் துண்டுகளை இருபுறமும் சிவக்க வறுத்து எடுக்கவும். 




ருசியான மீன் வறுவல் தயார்.  




நெத்திலி மீன் வறுவல்

0 கருத்துகள்

நெத்திலி மீன் வறுவல் 

தேவையான பொருட்கள் :

நெத்திலி மீன் - 1/4 கிலோ
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
மல்லி தூள் - 1 ஸ்பூன்
உப்பு - 1 + 1/2 ஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது - 1 ஸ்பூன் 
அரிசி மாவு - 1ஸ்பூன்
எண்ணெய் - 1/2 கப்

செய்முறை:

1. மீனை சுத்தம் செய்து 1/2 ஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி 3 முறை நீர் விட்டு அலசி வைக்கவும்.



2. ஒரு பாத்திரத்தில் மீனுடன் இஞ்சிபூண்டு விழுது, தூள் வகைகள், உப்பு சேர்த்து பிசிறி கொள்ளவும். 



3. அதனை ஃப்ரிட்ஜில் 30 நிமிடம் வைத்தால் மசாலா நன்கு ஊறி இருக்கும். 

4. பொறிப்பதற்கு முன்பு அதனுடன் அரிசி மாவு சேர்த்து கலந்து விடவும்.


5. பானில் எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும் மீன் துண்டுகளை போட்டு இருபுறமும் சிவரும் படி மொறுமொறுப்பாக பொறித்து எடுக்கவும்.




மொறுமொறுப்பான நெத்திலி மீன் வறுவல் தயார்.. 



* விரும்பினால் 1 ஸ்பூன் புளித்தண்ணீர் சேர்த்து மீனில் பிசிறி வைக்கலாம். அதுவும் நன்றாக இருக்கும்.

மீன் பொரியல்

2 கருத்துகள்


மீன் பொரியல் 

தேவையான பொருட்கள் :

மீன் - 1/2 கிலோ
மஞ்சள் தூள் - 1/2 + 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
மல்லி தூள் - 2 ஸ்பூன்
உப்பு - 1 + 1/2 ஸ்பூன்
எண்ணெய் - 1/2 கப்

செய்முறை:

1. மீனை சுத்தம் செய்து 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், 1 ஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி 3 முறை நீர் விட்டு அலசி வைக்கவும்.

2. ஒரு பாத்திரத்தில் தூள் வகைகள், உப்பு சேர்த்து சிறிது நீர் விட்டு கலந்து வைக்கவும்.

3. பின்னர் மீனை அந்த மசாலாவுடன் சேர்த்து நன்கு பிசிறி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.



4. பானில் எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும் மீன் துண்டுகளை போட்டு இருபுறமும் சிவரும் படி நன்கு பொறித்து எடுக்கவும்.



சுவையான மீன் பொரியல் தயார்.



* நான் இதில் கொடுவா மீன் பயன்படுத்தி உள்ளேன். எல்லா வகை மீன்களும் பயன்படுத்தலாம்.

* விரும்பினால் 1 ஸ்பூன் புளித்தண்ணீர் சேர்த்து மீனில் பிசிறி வைக்கலாம். அதுவும் நன்றாக இருக்கும்.

டூனா மீன் மசாலா

2 கருத்துகள்


டூனா மீன் மசாலா 

தேவையான பொருட்கள் :

டூனா மீன் - 1 டின் 
முட்டை - 1
வெங்காயம் - 2
தக்காளி - 2
குடைமிளகாய் - 1/2
இஞ்சிபூண்டு விழுது - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து 
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

1. வெங்காயம், தக்காளி, குடைமிளகாயை மெல்லியதாக நறுக்கி கொள்ளவும். டூனா மீனை எண்ணெயை வடித்து விட்டு உதிர்த்து வைக்கவும்.



2. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும்.


3. இஞ்சிபூண்டு சேர்த்து பச்சை வாசம் போக வதங்கியதும் தக்காளி,  குடைமிளகாய் சேர்க்கவும். தக்காளி குழைந்ததும் மீனை சேர்த்து பிரட்டி விடவும்.



4. பின்னர் தூள் வகைகள் சேர்க்கவும். மீன் வெந்து வரும் பொழுது கறிவேப்பிலை சேர்க்கவும்.


5. கடைசியாக முட்டையை உடைத்து ஊற்றி கொத்தி விடவும்.




டூனா மீன் மசாலா  ரெடி.

சாண்ட்விச், சப்பாத்தியுடன் சாப்பிட சுவையான சைட்டிஷ்.



நான் இதில் சில்லி டூனா பயன்படுத்தி இருப்பதால் காரம் குறைவாக சேர்த்திருக்கிறேன் .

நீங்கள் உங்கள் சுவைக்கேற்ப காரத்தை அதிகரித்து கொள்ளலாம்.

வஞ்சிரம் மீன் குழம்பு

0 கருத்துகள்




வஞ்சிரம் மீன் குழம்பு

தேவையான பொருட்கள் :

வஞ்சிரம் மீன் - 1/2 கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் பொடி - 1  ஸ்பூன்
மிளகாய் பொடி - 1 ஸ்பூன்
மீன் மசாலா பொடி - 2 டேபிள் ஸ்பூன் / தனியா தூள் - 2 டேபிள் ஸ்பூன்
புளி - சிறிய உருண்டை அளவு
தேங்காய் பால் - 1 கப்
உப்பு - 2 ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தாளிக்க :
கடுகு - 1/2 ஸ்பூன்
வெந்தயம் - 1/2 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
பூண்டு - 6 பல்


செய்முறை : 

1. மீனை சுத்தம் செய்து 1/2 ஸ்பூன் மஞ்சள் பொடி , 1 ஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு அலசி கொள்ளவும்.
2. வெங்காயம்,தக்காளியை மெல்லியதாகவும்,பச்சை மிளகாயை நடுவில் கீறியும் வைக்கவும்.



3. புளியை ஊற வைத்து 1 கப் புளித்தண்ணீர் வருமளவு கரைத்துக் கொள்ளவும்.
4. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க குடுத்துள்ள பொருட்களை சேர்க்கவும்.
5. வெங்காயம் மிளகாய் சேர்த்து நன்கு சிவரும் வரை வதக்கவும்.தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.




6. மஞ்சள் தூள்,மிளகாய் தூள், உப்பு சேர்க்கவும்.



7. புளித்தண்ணீருடன், தேங்காய்பால் மீன் மசாலாதூள் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.



8. இந்த கரைசலை குழம்பில் சேர்க்கவும்.மீன் துண்டுகளை சேர்த்து மூடி போட்டு நன்கு கொதிக்க விடவும்.



9. நன்கு கொதித்து மசாலா வாடை அடங்கியதும் அடுப்பிலிருந்து இறக்கவும்.



சுவையான வஞ்சிரமீன் குழம்பு தயார்.



ஃபிஷ் ஃப்ரை

6 கருத்துகள்

ஃபிஷ் ஃப்ரை




தேவையான பொருட்கள் :

மீன் - 4 துண்டுகள்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது - 1 ஸ்பூன்
உப்பு - 3/4 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
ஸ்பைசி ப்ரெட் க்ரம்ப்ஸ் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

செய்முறை :

1. மீனை சுத்தம் செய்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு அலசி கொள்ளவும்.
2. பின்னர் மீனுடன் மஞ்சள் தூள் , மிளகாய் தூள், இஞ்சிபூண்டு விழுது , உப்பு, எலுமிச்சை சாறு கலந்து நன்கு பிரட்டி ப்ரிட்ஜில் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.


3.பானில் எண்ணெய் ஊற்றி சூடானது ஊறிய மீன் துண்டுகளை ப்ரட் க்ரம்ப்சில் பிரட்டி பொரித்தெடுக்கவும்.



4.மொறு மொறுப்பான ஃபிஷ் ஃப்ரை  தயார்.



சிக்கன் மசாலாவில் மீன் பொரித்து சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.

சூடான சாதத்துடன் பக்க உணவாக பரிமாறலாம்.

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes