நெத்திலி மீன் - 1/4 கிலோ
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
மல்லி தூள் - 1 ஸ்பூன்
உப்பு - 1 + 1/2 ஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது - 1 ஸ்பூன்
அரிசி மாவு - 1ஸ்பூன்
எண்ணெய் - 1/2 கப்
செய்முறை:
1. மீனை சுத்தம் செய்து 1/2 ஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி 3 முறை நீர் விட்டு அலசி வைக்கவும்.
2. ஒரு பாத்திரத்தில் மீனுடன் இஞ்சிபூண்டு விழுது, தூள் வகைகள், உப்பு சேர்த்து பிசிறி கொள்ளவும்.
3. அதனை ஃப்ரிட்ஜில் 30 நிமிடம் வைத்தால் மசாலா நன்கு ஊறி இருக்கும்.
4. பொறிப்பதற்கு முன்பு அதனுடன் அரிசி மாவு சேர்த்து கலந்து விடவும்.
மொறுமொறுப்பான நெத்திலி மீன் வறுவல் தயார்..
* விரும்பினால் 1 ஸ்பூன் புளித்தண்ணீர் சேர்த்து மீனில் பிசிறி வைக்கலாம். அதுவும் நன்றாக இருக்கும்.










0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...