தேவையான பொருட்கள் :
புடலங்காய் - 1 (சிறியது)
வெங்காயம் - 1
துருவிய தேங்காய் - 1/4 கப்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
சோம்பு தூள் - 1/4 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
வரமிளகாய் - 2
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு - 3/4 ஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
1. புடலங்காயை மெல்லிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கி வைக்கவும்.
2. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும்.
3. பின்னர் புடலங்காயுடன் தூள் வகைகள் சேர்த்து வேக விடவும்.
5. 10 நிமிடத்தில் வெந்து விடும்.வெந்ததும் தேங்காயை தூவி பிரட்டி 2 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.
சுலபமாக செய்ய கூடிய புடலங்காய் பொரியல் ரெடி.
அனைத்து குழம்பு வகைகளுக்கும் பொருத்தமாக இருக்கும்.












0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...