சர்பத் வகைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சர்பத் வகைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சாத்துக்குடி ஜூஸ்

0 கருத்துகள்


சாத்துக்குடி ஜூஸ்

தேவையான பொருட்கள் :

சாத்துக்குடி - 5 
நன்னாரி சிரப் - 3 டேபிள் ஸ்பூன் 
குளிர்ந்த நீர் - 1 கப்

செய்முறை : 

1. சாத்துக்குடியை நன்கு பிழிந்து சாறு எடுத்து கொள்ளவும். 



2. மிக்சியில் சாத்துக்குடி சாறுடன் நன்னாரி சிரப், குளிர்ந்த நீர் இரண்டையும் சேர்த்து நுரை பொங்க அடிக்கவும். 



வெயிலுக்கு ஏற்ற சாத்துக்குடி ஜூஸ் தயார். 


புது சுவையுடன் குடிப்பதற்கு நன்றாக இருக்கும்.    

* இனிப்பு அதிகம் தேவைப்படுவோர் சிரப் அதிகமாக சேர்க்கலாம்.

இந்த செய்முறை எனது சித்தி சொன்னார்கள். அதிலிருந்து இப்படி தான் சாத்துக்குடி ஜூஸ் செய்கிறேன். சுவையில் வீட்டில் அனைவருக்கும் பிடித்து விட்டது.   

நுங்கு சர்பத்

4 கருத்துகள்


நுங்கு சர்பத்

தேவையான பொருட்கள் : 

பனைநுங்கு - 10
பால் - 1/2 லிட்டர்
சீனி - 4 டேபிள் ஸ்பூன்
ரோஸ் மில்க் எசன்ஸ் - 1 ஸ்பூன்

செய்முறை :

1. நுங்கை தோல் உரித்து கழுவி வைக்கவும்.


2. பின்னர் நீளமான குவளை கொண்டு சிறிய துண்டுகளாக கொத்தி விட்டு கொள்ளவும்.


3. பாலை நன்கு காய்ச்சி ஆற வைத்து சீனி சேர்த்து கலந்து வைக்கவும்.
4. ஆறிய பாலில் ரோஸ் மில்க் எசென்ஸ் சேர்த்து நுங்கு துண்டுகளையும் கலந்து ப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்று பரிமாறவும்.



கோடை வெயிலுக்கேற்ற உடலுக்கு குளிர்ச்சி தரும் நுங்கு சர்பத் தயார்.


நுங்கு சீசன் என்பதால் அடிக்கடி செய்து சாப்பிடலாம்.

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes