குருமா வகைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குருமா வகைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சிக்கன் கேஷு மசாலா

0 கருத்துகள்

சிக்கன் கேஷு மசாலா

தேவையான பொருட்கள் :

சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2
புதினா -  1/2  கப்
இஞ்சிபூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 20
வெள்ளை மிளகு - 1 ஸ்பூன்
சீரக தூள் - 1 ஸ்பூன்
மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - 3/4 ஸ்பூன்
நெய் - 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை : 

1. சிக்கனை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். முந்திரியை விழுதாக அரைத்து கொள்ளவும். வெங்காயம், தக்காளியை மெல்லியதாக நறுக்கி வைக்கவும்.


2. பானில் நெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். 


3. வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு விழுது, உப்பு சேர்த்து பச்சை வாசம் போனதும் தக்காளி, புதினா சேர்க்கவும்.



4. சிக்கனை சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.


5. தூள் வகைகள் சேர்த்து மசாலா வாசம் போனதும் முந்திரி விழுது சேர்த்து கலந்து விடவும். 




6. சிக்கன் வெந்து மசாலாவில் எண்ணெய் பிரிந்து வரும் பொழுது இறக்கவும்.

ருசியான சிக்கன் கேஷு மசாலா தயார். 


ரெஸ்டாரன்ட் சுவையில் வீட்டிலேயே சுலபமாக செய்து அசத்தலாம். 



மட்டன் வெள்ளை குருமா

0 கருத்துகள்



மட்டன் வெள்ளை குருமா

தேவையான பொருட்கள் :

மட்டன் - 1/2 கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 4
புதினா -  1/2  கப்
இஞ்சிபூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்
தேங்காய் -  1/2  கப்
முந்திரி - 10
வெள்ளை மிளகு - 1 ஸ்பூன்
தயிர் - 1 கப்
மிளகு தூள் - 1 ஸ்பூன்
சீரக தூள் - 1 ஸ்பூன்
உப்பு - 3/4 ஸ்பூன்
நெய் - 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

* வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை மெல்லியதாக நறுக்கி வைக்கவும். மட்டனை சுத்தம் செய்து கொள்ளவும்.


* தேங்காய், முந்திரியுடன் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.



* குக்கரில் மட்டன், 1 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து 5 விசில் வரும் வரை வேக வைத்து கொள்ளவும்.


* பின்னர் அதனுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, மிளகாய், 1 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது, நெய், தூள் வகைகள், உப்பு, தயிர், புதினா சேர்த்து கலந்து 2 விசில் வைக்கவும்.




* நன்கு வெந்த மட்டனுடன் தேங்காய் விழுதை சேர்த்து கொதிக்க விட்டு நெய் பிரிந்து வரும்பொழுது அடுப்பை அணைக்கவும்.



* சுவையான மட்டன் வெள்ளை குருமா தயார்.


* நெய்சோற்றுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
 















c








ஸ்பைசி பனீர் க்ரேவி 

0 கருத்துகள்


ஸ்பைசி பனீர் க்ரேவி 

தேவையான பொருட்கள் : 

பனீர் - 200 கிராம் 

வெங்காயம் - 1

தக்காளி - 3 

பட்டை - 1 துண்டு 

கிராம்பு, ஏலக்காய் - 2 

சீரகம் - 1/4 ஸ்பூன் 

மஞ்சள் தூள் - 1 ஸ்பூன் 

காஷ்மீரி மிளகாய் தூள் - 2 ஸ்பூன் 

மல்லி தூள் - 1 ஸ்பூன்

மிளகு தூள் - 1/2 ஸ்பூன்

உப்பு - 1 ஸ்பூன் 

எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன் 

நெய் - 1 டேபிள் ஸ்பூன்

முந்திரி - 8 

பால் - 1/4 கப்

செய்முறை : 

1. பனீரை சதுர துண்டுகளாக நறுக்கி வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். தக்காளியை மிக்சியில் விழுதாக அரைத்து கொள்ளவும். முந்திரியை மிக்சியில் தூள் செய்து வைக்கவும். 


2. ஒரு பவுலில் பனீருடன் 1 ஸ்பூன் மிளகாய் தூள், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 ஸ்பூன் உப்பு, 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பனீர் கலவையை 30 நிமிடம் ஊற விடவும்.


3. பானில் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.


4. வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.


5. பின்னர் தூள் வகைகள், உப்பு சேர்க்கவும். மசாலா வாசம் போனதும் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும்.




6. மசாலாவுடன் முந்திரி தூள் சேர்த்து கலந்து விடவும். ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். 


7. இன்னொரு பானில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் பனீர் கலவையை சேர்த்து வதக்கவும்.5 நிமிடம் கழித்து எடுத்து கொள்ளவும். 

8. க்ரேவி கொதித்து வந்ததும் பால் சேர்த்து விடவும். இறுதியாக வறுத்து வைத்த பனீர் துண்டுகளை சேர்த்து விடவும். 


9. க்ரேவி இறக்கும் பொழுது மிளகு தூள், நெய் சேர்த்து கலந்து விடவும்.


ஸ்பைசி பனீர் க்ரேவி தயார். 

ரெஸ்டாரன்ட் சுவையில் வீட்டிலேயே சுலபமாக செய்து அசத்தலாம். 

 * கடைசியாக கசூரி மேத்தி சேர்க்க வேண்டும். என்னிடம் இல்லாததால் மிளகு தூள் சேர்த்து செய்திருக்கிறேன்.

பட்டாணி குருமா - 2

0 கருத்துகள்

  பட்டாணி குருமா - 2

தேவையான பொருட்கள்:

வெங்காயம் - 2
தக்காளி - 2
பட்டாணி - 1 கப் 
வேகவைத்த உருளை - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சிபூண்டு விழுது - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
சீரக தூள் - 1/2 ஸ்பூன்
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
கரமசாலா தூள் - 1/2 ஸ்பூன்  
உப்பு - 1 ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 1
முந்திரி - 6 
தேங்காய் துருவல் - 1/2 கப்
மல்லிதழை - சிறிது

செய்முறை : 

 1. பட்டாணியை 6 மணி நேரம் ஊற வைத்து குக்கரில் 2 விசில் வரும் வரை வேக விடவும்.


 2. வெங்காயம், தக்காளியை மெல்லியதாக நறுக்கி கொள்ளவும். மிளகாயை     நடுவில் கீறி வைக்கவும். 

3.முந்திரியை தேங்காயுடன் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும். 


4. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளித்து வெங்காயம், மிளகாய் சேர்த்து வதக்கவும்.


5. பின்னர் இஞ்சிபூண்டு விழுது, உப்பு சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். 


6.  தக்காளி சேர்த்து குழைய வதங்கியதும்  அதனுடன் வேக வைத்த பட்டாணி, உருளையை சேர்க்கவும்.



7. தூள் வகைகள்  சேர்த்து பிரட்டிவிடவும். அரைத்து வைத்த முந்திரி விழுதை சேர்க்கவும்.



8. அத்துடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கலந்து நன்கு கொதிக்க விடவும்.



9. குருமா எண்ணெய் பிரிந்து வந்ததும் மல்லிதழை தூவி விடவும்.



சுவையான எளிதில் செய்யகூடிய பட்டாணி குருமா தயார்..



சப்பாத்தி, பரோட்டா, இடியாப்பம் உடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

* ஃப்ரோசன் பட்டாணி பயன்படுத்தினால் வேக வைக்க தேவை இல்லை.

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes