இறால் வகைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இறால் வகைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புடலங்காய் இறால் பொரியல்

0 கருத்துகள்

 

புடலங்காய் இறால் பொரியல்

தேவையான பொருட்கள் :

புடலங்காய் - 1 
இறால் - 1 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
இஞ்சி பூண்டு விழுது - 1/2 ஸ்பூன்
கடுகு - 1/2 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன் 
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன் 
சீரக தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - 3/4 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
தேங்காய் துருவல் - 1/4  கப்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை : 

1. புடலங்காயை தோல் சீவி சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கி வைக்கவும்.


2. இறாலை சுத்தம் செய்து வைக்கவும்.

3. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.


4. வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு விழுது, தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும். 


5. பின்னர் இறால், புடலங்காய் சேர்த்து பிரட்டி விடவும்.




6. தூள் வகைகள் சேர்த்து நன்கு கலந்து விட்டு மூடி போட்டு வேக விடவும்.




7. காய் வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து பிரட்டி விட்டு இறக்கவும்.



சுவையான புடலங்காய் இறால் பொரியல் தயார்.


அனைத்து குழம்பு வகைகளுக்கும் பொருத்தமாக இருக்கும்.



இறால் உருளை வறுவல்

0 கருத்துகள்


இறால் உருளை வறுவல்

தேவையான பொருட்கள் : 

உருளை - 1/4 கிலோ 
இறால் - 1/2 கப் 
இஞ்சிபூண்டு விழுது - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன் 
மிளகாய் தூள் - 1 ஸ்பூன் 
மல்லி தூள் - 1 ஸ்பூன் 
சீரக தூள் - 1/4 ஸ்பூன் 
உப்பு - 1 ஸ்பூன் 
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் 
கடுகு - 1 ஸ்பூன் 
கறிவேப்பிலை - 1 கொத்து   

செய்முறை : 

1. உருளையை தோல் சீவி சிறு சிறு சதுரங்களாக நறுக்கி கொள்ளவும். இறாலை சுத்தம் செய்து வைத்து கொள்ளவும். 



2. பானில் எண்ணெய் விட்டு சூடானதும் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து உருளை, இறால் சேர்த்து வதக்கவும். 


 3. பின்னர் தூள் வகைகள், உப்பு சேர்த்து பிரட்டி விடவும். தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். 



4. உருளை, இறால் வெந்ததும் கறிவேப்பிலை தூவி பிரட்டி விடவும். 




5. இறால் வெந்து மசாலாவில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும்பொழுது அடுப்பை அணைக்கவும். 


ருசியான உருளை இறால் வறுவல் தயார். 


அனைத்து வெரைட்டி ரைசுடனும் சாப்பிட சுவையாக இருக்கும்.    







இறால் மிளகு வறுவல்

0 கருத்துகள்


இறால் மிளகு வறுவல்

தேவையான பொருட்கள் :

இறால் - 1/4 கிலோ 
இஞ்சிபூண்டு விழுது - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன் 
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மிளகு தூள் - 1 ஸ்பூன்
சீரக தூள் - 1 ஸ்பூன்
உப்பு - 3/4 ஸ்பூன் 
தேங்காய் பால் - 1/2 கப் 
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் 
கறிவேப்பிலை - 1 கொத்து    

செய்முறை :

1. இறாலை சுத்தம் செய்து வைத்து கொள்ளவும். 



2. பானில் எண்ணெய் விட்டு சூடானதும் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போனதும் இறால் சேர்த்து வதக்கவும். 



3. பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரக தூள், உப்பு சேர்த்து பிரட்டி விடவும். 


4. மசாலா வாசம் போனதும் தேங்காய்ப்பால் சேர்த்து கலந்து விட்டு மூடி போட்டு வேக விடவும். 




5. இறால் வெந்து வரும்பொழுது மிளகு தூள், கறிவேப்பிலை சேர்த்து பிரட்டி விட்டு எண்ணெய் பிரிந்து வரும்பொழுது அடுப்பை அணைக்கவும்.   



சுவையான இறால் மிளகு வறுவல் தயார். 

சாம்பார், ரசம் இவற்றுடன் தொடுகறியாக சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும். 



இறால் உருண்டைகலியா

0 கருத்துகள்


இறால் உருண்டைகலியா

தேவையான பொருட்கள் : 

இறால் - 1 கப் 
முட்டை - 1
தேங்காய் துருவல் - 1/2 கப்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
பெருஞ்சீரகத் தூள் - 1/4 ஸ்பூன்
அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன் (விரும்பினால்)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1/4 கப்

செய்முறை : 

1.இறாலை சுத்தம் செய்து உப்பு சேர்த்து நன்கு அலசிக் கொள்ளவும்.


2. மிக்சியில் தேங்காயுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து ஒரு சுற்று சுற்றவும். 





3. பின்னர் அதனுடன் இறால் மற்றும் தூள் வகைகள்  சேர்த்து அரைக்கவும். 



4. கடைசியாக முட்டை சேர்த்து அரைத்து எடுக்கவும். 




5. அரைத்த விழுதுடன் அரிசி மாவு சேர்த்து கலந்து கொள்ளவும்.  




6. பேனில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இறால் கலவையை சிறு சிறு உருண்டைகளாக தட்டி இருபுறமும் பொரித்து எடுக்கவும்.




சூடாக சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.



இஸ்லாமிய இல்லங்களில் செய்யப்படும் பாரம்பரியமான உணவு இது.




 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes