இறால் உருளை வறுவல்
தேவையான பொருட்கள் :
உருளை - 1/4 கிலோ
இறால் - 1/2 கப்
இஞ்சிபூண்டு விழுது - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மல்லி தூள் - 1 ஸ்பூன்
சீரக தூள் - 1/4 ஸ்பூன்
உப்பு - 1 ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை :
1. உருளையை தோல் சீவி சிறு சிறு சதுரங்களாக நறுக்கி கொள்ளவும். இறாலை சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.
2. பானில் எண்ணெய் விட்டு சூடானதும் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து உருளை, இறால் சேர்த்து வதக்கவும்.
3. பின்னர் தூள் வகைகள், உப்பு சேர்த்து பிரட்டி விடவும். தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.
4. உருளை, இறால் வெந்ததும் கறிவேப்பிலை தூவி பிரட்டி விடவும்.
5. இறால் வெந்து மசாலாவில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும்பொழுது அடுப்பை அணைக்கவும்.
ருசியான உருளை இறால் வறுவல் தயார்.
அனைத்து வெரைட்டி ரைசுடனும் சாப்பிட சுவையாக இருக்கும்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...