மூளை வறுவல்
தேவையான பொருட்கள் :மூளை - 1
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 1
தக்காளி - 1
முட்டை - 1
இஞ்சிபூண்டு விழுது - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
சீரக தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - 3/4 ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி தழை - சிறிது
செய்முறை :
சீரக தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - 3/4 ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி தழை - சிறிது
செய்முறை :
1. ஆட்டு மூளையை சுத்தம் செய்து நன்கு கழுவி வைத்து கொள்ளவும். முட்டையை கலக்கி வைக்கவும்.
2. வெங்காயம், தக்காளியை மெல்லியதாக அரிந்து கொள்ளவும். மிளகாயை நடுவில் கீறி வைக்கவும்.
3. பானில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், தக்காளி, மிளகாய் சேர்த்து வதக்கவும்.
4. வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
5. பின்னர் மூளை, தூள் வகைகள், உப்பு சேர்த்து பிரட்டி விட்டு 5 நிமிடம் வேக விடவும்.
6. மூளை வெந்ததும் முட்டையை ஊற்றி நன்கு கொத்தி விடவும்.
7. முட்டை வெந்ததும் அடுப்பை அணைத்து மல்லிதழை தூவி பரிமாறவும்.
சுவையான மூளை வறுவல் தயார்.
சுலபமாக செய்யக்கூடிய தொடுகறியாக இருக்கும்.















0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...