மட்டன் ரெசிப்பீஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மட்டன் ரெசிப்பீஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மட்டன் வெள்ளை குருமா

0 கருத்துகள்



மட்டன் வெள்ளை குருமா

தேவையான பொருட்கள் :

மட்டன் - 1/2 கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 4
புதினா -  1/2  கப்
இஞ்சிபூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்
தேங்காய் -  1/2  கப்
முந்திரி - 10
வெள்ளை மிளகு - 1 ஸ்பூன்
தயிர் - 1 கப்
மிளகு தூள் - 1 ஸ்பூன்
சீரக தூள் - 1 ஸ்பூன்
உப்பு - 3/4 ஸ்பூன்
நெய் - 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

* வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை மெல்லியதாக நறுக்கி வைக்கவும். மட்டனை சுத்தம் செய்து கொள்ளவும்.


* தேங்காய், முந்திரியுடன் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.



* குக்கரில் மட்டன், 1 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து 5 விசில் வரும் வரை வேக வைத்து கொள்ளவும்.


* பின்னர் அதனுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, மிளகாய், 1 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது, நெய், தூள் வகைகள், உப்பு, தயிர், புதினா சேர்த்து கலந்து 2 விசில் வைக்கவும்.




* நன்கு வெந்த மட்டனுடன் தேங்காய் விழுதை சேர்த்து கொதிக்க விட்டு நெய் பிரிந்து வரும்பொழுது அடுப்பை அணைக்கவும்.



* சுவையான மட்டன் வெள்ளை குருமா தயார்.


* நெய்சோற்றுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
 















c








மூளை வறுவல்

0 கருத்துகள்

 மூளை வறுவல் 

தேவையான பொருட்கள் :

மூளை - 1
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 1
தக்காளி - 1 
முட்டை - 1
இஞ்சிபூண்டு விழுது - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகு தூள் - 1/2 ஸ்பூன் 
சீரக தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - 3/4 ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி தழை - சிறிது

செய்முறை : 


1. ஆட்டு மூளையை சுத்தம் செய்து நன்கு கழுவி வைத்து கொள்ளவும். முட்டையை  கலக்கி வைக்கவும்.



2. வெங்காயம், தக்காளியை மெல்லியதாக அரிந்து கொள்ளவும். மிளகாயை நடுவில் கீறி வைக்கவும். 

3. பானில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், தக்காளி, மிளகாய் சேர்த்து வதக்கவும். 


4. வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். 


5. பின்னர் மூளை, தூள் வகைகள், உப்பு சேர்த்து பிரட்டி விட்டு 5 நிமிடம் வேக விடவும்.




6. மூளை வெந்ததும் முட்டையை  ஊற்றி நன்கு கொத்தி விடவும். 




7. முட்டை வெந்ததும் அடுப்பை அணைத்து மல்லிதழை தூவி பரிமாறவும். 



சுவையான மூளை வறுவல் தயார். 

சுலபமாக செய்யக்கூடிய  தொடுகறியாக இருக்கும்.





மட்டன் க்ரேவி

0 கருத்துகள்


மட்டன் க்ரேவி

தேவையான பொருட்கள் :


மட்டன் - 1/2 கிலோ

வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய்- 2
உருளை - 2
பட்டை, கிராம்பு ,ஏலம் - தலா 1
இஞ்சிபூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
சீரக தூள் - 1/2 ஸ்பூன்
மல்லி தூள் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - 1 ஸ்பூன்
தயிர் -  1/2 கப் 
தேங்காய்ப்பால் - 1 கப்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
மல்லிதழை - சிறிது

செய்முறை : 

1. வெங்காயம், தக்காளியை மெல்லியதாக நறுக்கி கொள்ளவும். மிளகாயை நடுவில் 
கீறி வைக்கவும். உருளையை தோல் நீக்கி பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். 






2. குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலம் தாளித்து வெங்காயம், மிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும்.




3. பின்னர் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போனதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். சுத்தம் செய்த 
மட்டனை சேர்க்கவும்.








4. தூள் வகைகள், தயிர் சேர்த்து பிரட்டி விட்டு 1 கப் தண்ணீர் சேர்த்து 20 நிமிடம் சிம்மில் வைக்கவும் அல்லது 8 விசில் வைக்கவும்.








5. குக்கரில் ஆவி அடங்கியதும் தேங்காய்ப்பாலையும், உருளையையும் சேர்த்து கலந்து விட்டு மேலும் 2 விசில் வைத்து அடுப்பை அணைக்கவும்.



6. மட்டன் நன்கு வெந்து எண்ணெய் பிரிந்து க்ரேவி நன்றாக இருக்கும்.
மேலே மல்லிதழை தூவி பரிமாறவும்.



நெய்சோறு, பரோட்டா, இடியாப்பம் ஆகியவற்றுடன் சாப்பிட மட்டன் க்ரேவி தயார்.





ஈரல் பொரியல்

3 கருத்துகள்


ஈரல் பொரியல்

தேவையான பொருட்கள் : 

ஆட்டு ஈரல் - 1/4 கிலோ
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 1
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
சீரகத் தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - 1/2 ஸ்பூன்
மல்லிதழை, புதினா  - சிறிது
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை : 

1. ஈரலை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டி தூள் வகைகள், உப்பு  சேர்த்து பிசிறி வைக்கவும்.




2. தக்காளி, மிளகாயை சிறியதாக நறுக்கி கொள்ளவும்.
3. கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் தக்காளி, மிளகாய்  சேர்த்து வதக்கி இஞ்சிபூண்டு சேர்க்கவும்.

4. பச்சை வாசம் போனதும் ஈரல் கலவையை சேர்த்து வேக விடவும்.  மல்லிதழை, கறிவேப்பிலை  சேர்க்கவும்.


5. வேண்டுமென்றால் 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து பிரட்டி விடவும்.

6. 5 நிமிடத்தில் வெந்து எண்ணெய் பிரிந்து வந்து விடும்.

சத்தான ஈரல் பொரியல் தயார்.

ஈரல் இரத்த விருத்திக்கு மிகவும் நல்லது.

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes