தேவையான பொருட்கள் :
மட்டன் - 1/2 கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய்- 2
உருளை - 2
பட்டை, கிராம்பு ,ஏலம் - தலா 1
இஞ்சிபூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
சீரக தூள் - 1/2 ஸ்பூன்
மல்லி தூள் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - 1 ஸ்பூன்
தயிர் - 1/2 கப்
தேங்காய்ப்பால் - 1 கப்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
மல்லிதழை - சிறிது
செய்முறை :
1. வெங்காயம், தக்காளியை மெல்லியதாக நறுக்கி கொள்ளவும். மிளகாயை நடுவில் கீறி வைக்கவும். உருளையை தோல் நீக்கி பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
2. குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலம் தாளித்து வெங்காயம், மிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும்.
3. பின்னர் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போனதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். சுத்தம் செய்த மட்டனை சேர்க்கவும்.
4. தூள் வகைகள், தயிர் சேர்த்து பிரட்டி விட்டு 1 கப் தண்ணீர் சேர்த்து 20 நிமிடம் சிம்மில் வைக்கவும் அல்லது 8 விசில் வைக்கவும்.
5. குக்கரில் ஆவி அடங்கியதும் தேங்காய்ப்பாலையும், உருளையையும் சேர்த்து கலந்து விட்டு மேலும் 2 விசில் வைத்து அடுப்பை அணைக்கவும்.
6. மட்டன் நன்கு வெந்து எண்ணெய் பிரிந்து க்ரேவி நன்றாக இருக்கும்.
மேலே மல்லிதழை தூவி பரிமாறவும்.
நெய்சோறு, பரோட்டா, இடியாப்பம் ஆகியவற்றுடன் சாப்பிட மட்டன் க்ரேவி தயார்.




















0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...