இனிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இனிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

லேயர் கேக்

0 கருத்துகள்

லேயர் கேக் 

தேவையான பொருட்கள் : 

முட்டை - 3 

மைதா - 1 கப் 

சீனி - 3/4 கப் 

உப்பு - 1 பின்ச் 

முந்திரி - 15 

நெய் - 1/4 கப் 

 செய்முறை : 

 1. முந்திரியை பொடியாக நறுக்கி கொள்ளவும். முட்டையை சீனியுடன் மிக்சியில் அரைத்து கொள்ளவும். 



2. ஒரு பவுலில் மைதாவுடன் முட்டை கலவை, உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும். 


3. நறுக்கிய முந்திரியை சேர்த்து கலந்து விடவும். 

4. தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை மெல்லியதாக ஊற்றவும். மேலே நெய்யை கொஞ்சமாக ஊற்றவும். 


5. அதனை திருப்பி போட்டு மாவை மேலே ஊற்றி நெய் சிறிது ஊற்றவும். 

6. மாவு முடியும் வரை இதே போல் செய்யவும். 

7. நன்கு சிவந்ததும் எடுத்து துண்டுகள் போட்டு கொள்ளவும். 

சுவையான லேயர் கேக் தயார். 


 * பேக்கிங் சோடா எதுவும் சேர்க்காமலேயே மிருதுவாக சுவையாக இருக்கும். 

வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே 30 நிமிடத்தில் செய்து விடலாம்.

பன் ஹல்வா 

0 கருத்துகள்

 பன் ஹல்வா 

தேவையான பொருட்கள் : 

பன் - 1 பாக்கெட் (சிறியது)

சீனி - 1/2 கப்

தண்ணீர் - 3/4 கப் 

முந்திரி - 10 

திராட்சை - 10

குங்குமப்பூ - 1 பின்ச் 

நெய் - 1/2 கப்

செய்முறை : 

1. பானில் 1 ஸ்பூன் நெய் விட்டு சூடானதும் பன்னை இருபுறமும் வாட்டி எடுத்து கொள்ளவும். பன்னை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.




2. பானில் 1 ஸ்பூன் நெய் விட்டு சூடானதும் முந்திரி, திராட்சையை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். 


3. சீனியுடன் தண்ணீர் சேர்த்து கரைந்ததும் பன் துண்டுகளை சேர்த்து கலந்து விடவும். 



4. பன் துண்டுகள் பாகில் கரைந்து வரும்பொழுது சிறிது சிறிதாக நெய் சேர்க்கவும்.

5. ஹல்வாவில் இருந்து நெய் பிரிந்து வரும்பொழுது முந்திரி, திராட்சை, குங்குமப்பூ சேர்த்து கலந்து விடவும்.

 6. சுவையான பன் ஹல்வா எளிதில் தயார். 

 * பன்னுக்கு பதிலாக ப்ரெட் துண்டுகளை பயன்படுத்தியும் செய்யலாம். 


சர்க்கரை பொங்கல் 

0 கருத்துகள்

 சர்க்கரை பொங்கல் 

 தேவையான பொருட்கள் :

 பச்சரிசி - 1/2 கப் 

 வெல்லம் - 3/4 கப் 

 கடலை பருப்பு - 2 டேபிள் ஸ்பூன் 

 பாசி பருப்பு - 2 டேபிள் ஸ்பூன் 

 ஏலக்காய் - 2 

முந்திரி - 10 

திராட்சை - 10

நெய் - 1/4 கப்

செய்முறை : 

1. குக்கரில் 1 ஸ்பூன் நெய் விட்டு பாசிப்பருப்பை வறுத்து கொள்ளவும். அதனுடன் களைந்த பச்சரிசி, கடலை பருப்பு சேர்த்து கொள்ளவும்.



2. 2.5 கப் தண்ணீர் தண்ணீர் சேர்த்து 3 விசில் வைக்கவும்.



3. கடாயில் வெல்லத்தை 1/4 கப் தண்ணீர் சேர்த்து வெல்லம் கரைத்து வந்ததும் தூசு இல்லாமல் வடிகட்டி வைக்கவும். 


4. குக்கரில் மசிந்த அரிசி, பருப்புடன் வெல்லபாகு, ஏலக்காய் சேர்த்து கலந்து 2 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும். 



5. பானில் நெய் விட்டு சூடானதும் முந்திரி, திராட்சை சேர்த்து சிவந்ததும் பொங்கலில் சேர்க்aகவும். 




இனிப்பான நெய் வாசத்துடன் சர்க்கரை பொங்கல் தயார்.



வட்டலாப்பம்

0 கருத்துகள்

 வட்டலாப்பம் 


தேவையான பொருட்கள் : 

முட்டை - 4 

முந்திரி - 20

பால் - 1 கப் 

சீனி - 1 கப் 

ஏலக்காய் - 2 

நெய் - 2 டேபிள் ஸ்பூன்

குங்குமப்பூ - சிறிதளவு

செய்முறை : 

1. முந்திரியை 1 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் அதனுடன் பால் சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ளவும். 




2. ஒரு அகலமான பாத்திரத்தில் நெய் தடவி அதில் முந்திரி பால் அரைத்த விழுதை வடிகட்டி கொள்ளவும். 


3. மிக்சியில் முட்டையுடன், சீனி, ஏலக்காய் சேர்த்து அரைத்து அதே போல் வடிகட்டவும். 



4. முட்டை கலவையையும் அதே பாத்திரத்தில் ஊற்றி நன்கு கலந்து விடவும். 

5. மேலாக குங்குமப்பூ தூவி விடவும். 

6. ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் கால் பங்கு தண்ணீர் ஊற்றி நடுவில் ஒரு கலவடையை வைத்து முட்டை கலவை உள்ள பாத்திரத்தை கவனமாக வைக்கவும். 



7. அரை மணி நேரம் கழித்து ஒரு கத்தியை உள்ளே விட்டு பார்த்தால் ஒட்டாமல் வெளியே வரும். இதுவே சரியான பதம். 


சுவையான வட்டலாப்பம் தயார். 


வட்டலாப்பம் பண்டிகை காலங்களில் இஸ்லாமிய இல்லங்களில் செய்யப்படும் ஒரு இனிப்பு வகையாகும். .

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes