மலேசியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலேசியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தேங்காய்பால் கடல்பாசி

0 கருத்துகள்

                                               

                                                     தேங்காய்பால் கடல்பாசி

தேவையான பொருட்கள் :

கடல்பாசி - 1 
கப்
வெல்லம்  - 100  கிராம்
தேங்காய்பால் - 1.5 கப்
தண்ணீர் - 2 கப்

செய்முறை :

1. பாத்திரத்தில் வெல்லத்துடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து வெல்லம் கரையும் கரை காய்ச்சவும். 



2. லேசாக கொதி வந்ததும் வெல்ல கலவையை தூசி இல்லாமல் வடிகட்டி வைக்கவும்.



3.பின்னர் வெல்ல கலவையுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து சூடாக்கவும். தண்ணீர் சூடானதும் கடல்பாசி சேர்த்து நன்கு கரையும் வரை கலக்கவும்.



4.கடைசியாக தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி அகலமான பானில் வடி கட்டவும்.





5.ஆறியதும் துண்டுகள் போட்டு சில்லென்று பரிமாறவும்.

ஆரோக்கியமான தேங்காய்ப்பால் கடல்பாசி தயார்.



டபுள் கலரில் இருக்கும் இந்த தேங்காய்ப்பால் கடல்பாசி மலேசியா, சிங்கப்பூரில் மிகவும் பிரசித்தம்.இதனுடன் முட்டையை சேர்த்தும் செய்வதுண்டு.

 * இதனுடன் பாண்டன் இலையை (Pandan Leaves) சேர்த்து செய்வதுண்டு.      என்னிடம் இல்லாததால் சேர்க்கவில்லை. நல்ல மணமாக இருக்கும்.



 




Iron Mosque

4 கருத்துகள்



Iron Mosque - Malaysia

நான்கு புறமும் நீர் சூழ்ந்த அழகான ஆச்சரியமான பள்ளிவாசல் இது.
பள்ளியின் முழு பெயர் மிசான் சைனுல் ஆபிதீன் பள்ளி.

Iron Mosque என்றே அனைவரும் சொல்கிறார்கள்.

அங்கு சில க்ளிக்ஸ் மட்டுமே எடுக்க முடிந்தது.





கடந்த மாதம் எங்களின் திருமண நாளிற்காக செய்த குலோப்ஜாமூன்..
நீங்களும் சாப்பிடுங்க.........



மீண்டும் ஒரு பதிவில் சந்திக்கலாம்.

புத்ரா மசூதி - மலேசியா

4 கருத்துகள்



புத்ரா மசூதி - மலேசியா

கடந்த வருட புத்தாண்டு விடுமுறையின் பொழுது மலேசியா சென்றோம்.
அங்கு KL இல் நாங்கள் சென்ற புகழ் பெற்ற மசூதிகளில் எடுத்த சில கிளிக்ஸ்.

புத்ரஜயாவில் என் கணவர் இந்த இரு இடங்களுக்கும் செல்ல ஆசைபட்டதால் அங்கு சென்றோம்.


1. புத்ரா மசூதி (Putra Mosque)





அங்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு கூட சிவப்பு நிறத்தில் நீண்ட அங்கி போன்று குடுத்து அணிந்து பள்ளி உள்ளே வர சொல்லுகிறார்கள்.



புத்ரஜயாவில் புத்ரா மசூதி தவிர இன்னொரு பள்ளியும் மிக புகழ் பெற்றது. அதனை பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.
நாங்கள் சென்ற உறவினர் வீட்டில் வெற்றிலை செடி இருந்தது.நான் இதுவரை பார்த்ததில்லை அதையும் ஒரு கிளிக் உங்களுக்காக.



 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes