பொடி வகைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொடி வகைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சாம்பார் பொடி

0 கருத்துகள்


சாம்பார் பொடி 

தேவையான பொருட்கள் : 

மல்லி - 1 கப் 
வரமிளகாய் - 2 கப் 
உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
கடலை பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்  
துவரம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன் 
கடுகு - 2 ஸ்பூன் 
வெந்தயம் - 2 ஸ்பூன் 
மிளகு - 1.5
 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1.5 டேபிள் ஸ்பூன் 
பெருங்காயம் - 2 துண்டுகள் 
மஞ்சள் தூள் - 1 டேபிள் ஸ்பூன் 


செய்முறை : 

 1. கடாய் சூடானதும் பருப்பு வகைகளை நன்கு சிவக்க வறுத்து எடுத்து கொள்ளவும். 



 2. பின்னர் மல்லியை சேர்த்து சூடு வரும் வரை வறுக்கவும்.


 3. அதனுடன் மிளகு, சீரகம், வெந்தயம், கடுகு சேர்த்து வறுக்கவும். 



4. வரமிளகாயை லேசாக நிறம் மாறாமல் வறுத்துக் கொள்ளவும்.


 5. கடைசியாக கடாயில் சிறிது எண்ணெய் விட்டு பெருங்காய துண்டுகளை சேர்த்து பொரிந்தவுடன் எடுக்கவும். 


 6. வறுத்து வைத்துள்ள அனைத்து பொருட்களுடன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.


வீட்டிலேயே எளிதாக செய்யகூடிய சாம்பார் பொடி தயார்.

காற்று புகாத கண்டெய்னரில் வைத்து மூன்று மாதம் வரை பயன்படுத்தலாம். 


 * காரம் அதிகம் தேவைப்படுபவர்கள் மிளகாயின் அளவை அதிகரித்து கொள்ளலாம்.

 * காஷ்மீரி மிளகாய் பயன்படுத்தினால் சாம்பார் பொடி நல்ல சிகப்பாக இருக்கும். 

 * கட்டி பெருங்காயத்திற்க்கு பதில் தூள் பெருங்காயம் உபயோகிக்கலாம்.      

இட்லி பொடி

0 கருத்துகள்


இட்லி பொடி 

தேவையான பொருட்கள் : 


உளுத்தம் பருப்பு - 1/2 கப் 

கடலை பருப்பு - 1/2 கப் 
வரமிளகாய் - 20 
கறிவேப்பிலை - 2 கொத்து 
பெருங்காயம் - 4 துண்டுகள் 
பூண்டு - 10 பல் 
உப்பு - 1 ஸ்பூன்
நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்  

செய்முறை : 


1. பானில் எண்ணெய் விட்டு சூடானதும் பருப்பு வகைகளை சேர்த்து நன்கு சிவக்க வறுத்து கொள்ளவும். 








2. பின்னர் வரமிளகாய், கறிவேப்பிலை இரண்டையும் சூடு வரும் வரை வறுத்து எடுக்கவும். 






3. நல்லெண்ணெய் விட்டு சூடானதும் பெருங்காயம், பூண்டு பற்கள் சேர்த்து சிவக்க வறுத்து வைக்கவும். 








4. அனைத்தும் ஆறியதும் மிக்சியில் போட்டு உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.






சுவையான இட்லி பொடி தயார். 

காரம் அதிகம் விரும்புவோர் மிளகாயின் அளவை அதிகரித்து கொள்ளலாம்.






 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes