சாம்பார் பொடி


சாம்பார் பொடி 

தேவையான பொருட்கள் : 

மல்லி - 1 கப் 
வரமிளகாய் - 2 கப் 
உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
கடலை பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்  
துவரம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன் 
கடுகு - 2 ஸ்பூன் 
வெந்தயம் - 2 ஸ்பூன் 
மிளகு - 1.5
 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1.5 டேபிள் ஸ்பூன் 
பெருங்காயம் - 2 துண்டுகள் 
மஞ்சள் தூள் - 1 டேபிள் ஸ்பூன் 


செய்முறை : 

 1. கடாய் சூடானதும் பருப்பு வகைகளை நன்கு சிவக்க வறுத்து எடுத்து கொள்ளவும். 



 2. பின்னர் மல்லியை சேர்த்து சூடு வரும் வரை வறுக்கவும்.


 3. அதனுடன் மிளகு, சீரகம், வெந்தயம், கடுகு சேர்த்து வறுக்கவும். 



4. வரமிளகாயை லேசாக நிறம் மாறாமல் வறுத்துக் கொள்ளவும்.


 5. கடைசியாக கடாயில் சிறிது எண்ணெய் விட்டு பெருங்காய துண்டுகளை சேர்த்து பொரிந்தவுடன் எடுக்கவும். 


 6. வறுத்து வைத்துள்ள அனைத்து பொருட்களுடன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.


வீட்டிலேயே எளிதாக செய்யகூடிய சாம்பார் பொடி தயார்.

காற்று புகாத கண்டெய்னரில் வைத்து மூன்று மாதம் வரை பயன்படுத்தலாம். 


 * காரம் அதிகம் தேவைப்படுபவர்கள் மிளகாயின் அளவை அதிகரித்து கொள்ளலாம்.

 * காஷ்மீரி மிளகாய் பயன்படுத்தினால் சாம்பார் பொடி நல்ல சிகப்பாக இருக்கும். 

 * கட்டி பெருங்காயத்திற்க்கு பதில் தூள் பெருங்காயம் உபயோகிக்கலாம்.      

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes