ரோஸ்மில்க் கடல்பாசி


ரோஸ்மில்க் கடல்பாசி

தேவையான பொருட்கள் :

கடல்பாசி - கைப்பிடி அளவு
சீனி - 4 டேபிள் ஸ்பூன்
பால் - 250 ml 
ரோஸ் எஸென்ஸ்  - சிறிது
தண்ணீர் - 2 கப்

செய்முறை :

1. பாலை நன்கு காய்ச்சி ஆற வைக்கவும். 


2. பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்.. லேசாக கொதி வந்ததும் கடல்பாசியை சேர்த்து நன்கு கரையும் வரை கைவிடாமல் கிளறவும்.



3. பின்னர் சீனி சேர்த்து கரைந்து வந்ததும் வடிகட்டி ஆற வைத்துள்ள பாலில் சேர்த்து கலக்கவும். 



4. பாலில் தேவையான அளவு ரோஸ் எஸென்ஸ் சேர்த்து நுரைத்து வரும் வரை காய்ச்சவும்.



5. அகலமான தட்டில் வடிகட்டி ஆறவிடவும்..ஆறியதும் துண்டுகள் போட்டு சில்லென்று பரிமாறவும்...


ஆரோக்கியமான ரோஸ்மில்க் கடல்பாசி தயார். 


உடலுக்கு குளிர்ச்சி தரும் கடல்பாசி அனைத்து வயதினரும் சாப்பிடலாம். 

இனிப்பு அதிகமாக விரும்புவோர் சீனியின் அளவை அதிகப்படுத்தி கொள்ளலாம். நான் மிதமான இனிப்பு தான் சேர்த்துள்ளேன்.   


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes