சிக்கன் ஃப்ரை
தேவையான பொருட்கள் :
சிக்கன் - 1/2 கிலோ
இஞ்சிபூண்டு விழுது - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - 1 ஸ்பூன்
கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
முட்டை - 1
எண்ணெய் - 1 கப்
செய்முறை :
1. சிக்கனை சுத்தம் செய்து கொள்ளவும்.
2. சிக்கனுடன் இஞ்சிபூண்டு விழுது, தூள் வகைகள், உப்பு சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.
4. சிக்கன் கலவையை ஃப்ரிட்ஜில் 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
5. கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் சிக்கன் துண்டுகளை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
எளிதான ரெஸ்டாரன்ட் சுவையில் சிக்கன் ஃப்ரை தயார்.பிரியாணி, ஃப்ரைட் ரைசுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...