பிரியாணி வகைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரியாணி வகைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சிக்கன் பிரியாணி

0 கருத்துகள்


 சிக்கன் பிரியாணி

தேவையான பொருட்கள் :

பாஸ்மதி அரிசி - 2 கப்
சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 4
இஞ்சிபூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
பிரியாணி மசாலா - 2 ஸ்பூன்
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
சீரக தூள் - 1/2 ஸ்பூன்
பட்டை - 2 துண்டு
கிராம்பு , ஏலக்காய் - 2
உப்பு - 2 ஸ்பூன்
தயிர் - 1 கப்
மல்லிதழை , புதினா - 1/2 கப்
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
முந்திரி - 6 
திராட்சை - 10
எண்ணெய் - 1/2 கப்
நெய் - 4 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

1. பாஸ்மதி அரிசியை களைந்து தண்ணீரில் 20 நிமிடம்  நேரம் ஊற வைக்கவும்.

2.வெங்காயம்,தக்காளியை மெல்லியதாக நறுக்கி கொள்ளவும்.
 பச்சை மிளகாயை நடுவில் கீறி  வைக்கவும். கோழியை சுத்தம் செய்து வைக்கவும்.


3. குக்கரில் நெய், எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய்,  1ஸ்பூன் உப்பு சேர்த்து வதக்கவும்.

4. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பச்சை வாசம் போனதும் தக்காளி, மல்லி, புதினா சேர்த்து குழைய வதக்கவும்.


5. பின்னர்  கோழி  துண்டுகள், தூள் வகைகள், தயிர் சேர்த்து பிரட்டி விடவும்.


6. குருமாவில் 1 கப் நீர் சேர்த்து   2 விசில் வரும் வரை வேக விடவும்.


7. பெரிய பானில் வெந்த கோழி குருமாவை ஊற்றி அத்துடன் 2 கப் தண்ணீர், 1 ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து விடவும்.

8. தண்ணீர் கொதி வந்ததும் பாஸ்மதி அரிசியை சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.


9. வெங்காயம், முந்திரி, திராட்சையை சிவக்க வறுக்கவும்.


10. பிரியாணி வெந்ததும் மேலே வறுத்த முந்திரி, திராட்சை, வெங்காயம், மல்லி புதினா ஆகியவற்றை தூவி விடவும்.


11. பின்னர் அனைத்தையும் ஒருசேர அரிசி உடையாமல்  பிரட்டி விடவும்.

கமகமக்கும் சூடான சிக்கன் பிரியாணி தயார். 


புதிதாக பிரியாணி செய்பவர்கள் இந்த முறையில் செய்தால் அடிபிடிக்குமே என்ற கவலை இல்லாமல் இருக்கலாம்.

இதனை ஆனியன் ரைத்தா, முட்டையுடன் பரிமாறலாம்.

* காரம் குறைவாக சாப்பிடுபவர்கள் பச்சை மிளகாய், மிளகாய் தூள் அளவை குறைத்துக் கொள்ளலாம்.


சிக்கன் சேமியா பிரியாணி

0 கருத்துகள்


சிக்கன் சேமியா பிரியாணி

தேவையான பொருட்கள் : 


சேமியா - 1 பாக்கெட்
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
போன்லெஸ் சிக்கன் - 100 கிராம்
முந்திரி - 6
இஞ்சிபூண்டு விழுது - 1 ஸ்பூன்
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
கரமசாலா தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - 1 ஸ்பூன் 
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
புதினா - சிறிது 

செய்முறை : 

1. வெங்காயம், தக்காளியை மெல்லியதாகவும், பச்சை மிளகாயை நடுவில் கீறியும் வைக்கவும். முந்திரி, சிக்கனை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

2. பானில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும். 


3. இஞ்சிபூண்டு, முந்திரி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.


4. பின்னர் தக்காளி, புதினா, சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு வதக்கவும்.




5. அதனுடன் தூள் வகைகள், தயிர் சேர்த்து பிரட்டி விடவும்.





6. மசாலா திக்காக வரும் சமயம் 3 கப் நீர் சேர்த்து கொதிக்க விடவும். கொதி வந்ததும் சேமியாவை சேர்த்து மூடி போட்டு 10 நிமிடம் வேக விடவும்.



7. தண்ணீர் வற்றி சேமியா வெந்து வரும் பொழுது அடுப்பை  அணைக்கவும்.

ஈசியாக செய்ய கூடிய சிக்கன் சேமியா பிரியாணி தயார்.

* பனீர், மஷ்ரூம் இப்படி எது வேண்டுமென்றாலும் சேர்த்து செய்தால் ருசியாக இருக்கும்.







கோதுமை ரவை பிரியாணி

2 கருத்துகள்


இது இணையத்தில் பார்த்து முயற்சித்த குறிப்பு தான். சுவையாக இருந்தது. நீங்களும் செய்து பார்த்து எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க.....

கோதுமை ரவை பிரியாணி

தேவையான பொருட்கள் :

கோதுமை ரவை - 1 கப்
வெங்காயம் - 1
தக்காளி  - 1
பச்சை மிளகாய் - 2
கேரட் - 1
குடைமிளகாய் - 1/2
காலிப்ளவர் - 1/2
இஞ்சிபூண்டு விழுது - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
கரமசாலா தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - 1 ஸ்பூன்
தயிர் - 1 டேபிள் ஸ்பூன் 
மல்லிதழை - சிறிது
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்

தாளிக்க :

பட்டை - 2 துண்டு
கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ - தலா 1

செய்முறை :

1. கோதுமை ரவையை அலசி வைத்து கொள்ளவும். காய்கறிகளை மெல்லியதாக நறுக்கி கொள்ளவும். காலிப்ளவரை சிறிய பூக்களாக உதிர்த்து சுடுநீரில் போட்டு வடிகட்டி  வைக்கவும். 

2. குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் தாளிக்க குடுத்துள்ளதை தாளித்து வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும்.


3. இஞ்சிபூண்டு சேர்த்து பச்சை வாசம் போக வதங்கியதும் குடைமிளகாய், கேரட், காலிப்ளவர் சேர்க்கவும்.

4. பின்னர் தூள் வகைகள், தயிர் சேர்க்கவும்.  கோதுமை ரவையை சேர்த்து நன்கு மசாலாவில் சேரும்படி பிரட்டி விடவும்.

5. 2 கப் தண்ணீர் சேர்த்து எல்லாம் ஒரு சேர பிரட்டி விட்டு 1 விசில் வந்ததும் இறக்கி மல்லிதழை தூவி பரிமாறவும்.

வாசமான ஹெல்தி கோதுமை ரவை பிரியாணி தயார்.

காலை உணவிற்கு ஏற்றது. தயிர் பச்சடியுடன் சாப்பிட நன்றாக இருந்தது.

சிக்கன் பிரியாணி

3 கருத்துகள்

சிக்கன் பிரியாணி



தேவையான பொருட்கள் :

பாஸ்மதி அரிசி - 2 கப்
சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 2
பழுத்த மிளகாய் - 3
இஞ்சிபூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 11/2 ஸ்பூன்
பிரியாணி மசாலா - 2 ஸ்பூன்
முந்திரி - 10
சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
பட்டை - 2 துண்டு
கிராம்பு , ஏலக்காய் - 2
உப்பு - 2 ஸ்பூன்
தயிர் - 1/2 கப்
மல்லிதழை , புதினா - 1/2 கப்
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
எண்ணெய் - 1 கப்
நெய் - 1 டேபிள் ஸ்பூன் (விரும்பினால்)

செய்முறை :

1.பாஸ்மதி அரிசியை களைந்து தண்ணீரில் 1/4 மணி நேரம் ஊற வைக்கவும்.
2.வெங்காயம் , தக்காளியை மெல்லியதாக நறுக்கி கொள்ளவும்.மிளகாயை நடுவில் கீறி வைக்கவும்.முந்திரியை 1/2 மணி நேரம் ஊற வைத்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
3.கோழியை சுத்தம் செய்து பாதி அளவு இஞ்சிபூண்டு , 1 ஸ்பூன் மிளகாய் தூள், சோள மாவு,உப்பு சேர்த்து பிசிறி 1 மணி நேரம் ப்ரிட்ஜில் வைக்கவும்..
4.பின்னர் சட்டியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பொரித்து எடுக்கவும்.
5.அரிசியை களைந்து 3 கப் தண்ணீர் , 1 ஸ்பூன் உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்..
6..கடாயில் நெய் ,எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை கிராம்பு , ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.பின்னர் வெங்காயம் , மிளகாய் சேர்த்து வதக்கவும்.




7.மீதம் உள்ள இஞ்சி பூண்டு விழுது , மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்..பச்சை வாசம் போனதும் தக்காளி ,மல்லி புதினா சேர்த்து குழைய வதக்கவும்.


8.முந்திரி விழுதினை சேர்க்கவும்..பின்னர் தூள் வகைகள் , உப்பு, தயிர் சேர்த்து பிரட்டி விடவும்...




9.பின்னர் வறுத்து வைத்த கோழி துண்டுகளை குருமாவில் சேர்த்து 1/2 கப் நீ\ர் சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.எண்ணெய் பிரிந்து வரும் பொழுது அடுப்பை அணைக்கவும்...




10.ஒரு பெரிய பாத்திரத்தில் பாதி அளவு சோறு, கொஞ்சம் குருமா, மீதி சோறு குருமா என அடுக்காக வைத்து ஒரு சேர அரிசி உடையாமல் பிரட்டி விடவும்.கடைசியில் 2 கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து கிளறவும்.



12.மேலாக கோழி துண்டுகள் வைத்து,மல்லி புதினா தூவி  விடவும்..
13.அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அதன் மேல் பிரியாணி சட்டியை வைத்து 10 நிமிடம் தம் போடவும்.


சூடான சிக்கன் பிரியாணி தயார்.
இதனை ஆனியன் ரைத்தா ,முட்டை ,கோழி வறுவல் உடன் பரிமாறலாம்.

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes