மாம்பழ கேசரி
தேவையான பொருட்கள் :
மாம்பழம் - 1 (பெரியது)
ரவா - 1/2 கப்
சீனி - 1/2 கப்
முந்திரி - 10
உலர் திராட்சை - 20
நெய் - 1/4 கப்
ஏலக்காய் - 2
உப்பு - 1/4 ஸ்பூன்
குங்குமப்பூ - சிறிது
செய்முறை :
1. மாம்பழத்தை தோல் சீவி துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு கூழாக அரைத்து கொள்ளவும்.
2. பானில் நெய் விட்டு சூடானதும் முந்திரி, உலர் திராட்சை சேர்த்து சிவக்க வறுத்து எடுத்து கொள்ளவும்.
3. பின்பு அதே நெய்யில் ரவாவை பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும்.
4. பானில் 1 கப் தண்ணீர் சேர்த்து கொதி வந்ததும் ரவா, உப்பு சேர்த்து கலந்து வேக விடவும்.
5. ரவா வெந்ததும் மாம்பழ கூழையும் நன்கு கலந்து விடவும். அதனுடன் ஏலக்காயை பிரித்து போடவும்.
6. பின்னர் சீனி சேர்த்து கிளறவும். நடுவில் நெய் சேர்த்து கொள்ளவும்.
7. நெய் பிரிந்து கேசரி திரண்டு வரும்பொழுது வறுத்த முந்திரி, உலர் திராட்சை, குங்குமப்பூ சேர்த்து மீதமாகும் நெய்யையும் சேர்த்து கிளறி இறக்கவும்.
அருமையான வாசத்துடன் புது வித சுவையில் மாம்பழ கேசரி தயார்.
* நான் பாதிரி மாம்பழம் உபயோகித்துள்ளேன். நார் இல்லாத மாம்பழமாக இருந்தால் நன்றாக இருக்கும்.
* மாம்பழம் இனிப்பாக இருப்பதால் குறைவான அளவு சீனி தான் சேர்த்துள்ளேன். இனிப்பு அதிகம் தேவைப்படுவோர் சீனியின் அளவை அதிகபடுத்தி கொள்ளலாம்.
















0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...