பருப்பு கடைதல்
தேவையான பொருட்கள் :
துவரம் பருப்பு - 1/2 கப்
பூண்டு - 5 பல்
தேங்காய் துருவல் - 1/4 கப்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - 1/2 ஸ்பூன்
கறிவடகம் - சிறிது
கறிவேப்பிலை - 1 கொத்து
ரசம் - 2 கரண்டி
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
1. துவரம் பருப்பை நன்கு களைந்து அதனுடன் பூண்டு பற்கள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.
2. பருப்பை கடைந்து விட்டு தேங்காய் துருவல் சேர்த்து பிரட்டி விடவும்.
3. பின்னர் சூடான ரசத்தினை சேர்த்து கலந்து கொள்ளவும்.
4. பானில் நெய் விட்டு சூடானதும் கறிவடகம், மிளகாய் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பருப்பில் கொட்டி கலந்து விடவும்.
சுவையான பருப்பு கடைதல் தயார்.
சூடான சோற்றுடன் கடைந்த பருப்பு, ரசம், உருளை வறுவல், அப்பளம் சேர்த்து சாப்பிட சுவை கூடும்.
இது இஸ்லாமிய இல்லங்களில் செய்யப்படும் ஒரு பாரம்பரிய உணவாகும்.
பார்ப்பதற்க்கு எளிதான உணவாக இருந்தாலும் அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடுவார்கள்.












0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...