வெங்காய அடை


வெங்காய அடை

தேவையான பொருட்கள் : 


அரிசி மாவு - 2 கப்

வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
தேங்காய் - 1/2 மூடி
முட்டை - 1
உப்பு - 1 ஸ்பூன்
பெருஞ்சீரகத் தூள் - 1/2 ஸ்பூன்
எண்ணெய் + நெய் - 1/2 கப்

செய்முறை : 


1. பச்சரிசியை களைந்து மெல்லிய துணியில் வெயிலில் காய வைத்து லேசான ஈரமாக இருக்கும் போதே மிக்சியில் ரவை போல் அரைத்துக் கொள்ளவும்.இந்த அடை செய்வதற்கு இதுவே சரியான பதம்.




2. மிக்சியில் தேங்காயுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து ஒரு சுற்று சுற்றவும். 




3. பின்னர் அதனுடன் முட்டை, பெருஞ்சீரகத் தூள், உப்பு சேர்த்து அரைக்கவும்.  




4.  அரிசி மாவுடன் அரைத்த விழுதை சேர்த்து தேவையான தண்ணீர் தெளித்து பிசைந்து 1/2 மணி நேரம் ஊற விடவும்.




5. எண்ணெய் + நெய்யை கலந்து வைத்து கொள்ளவும்.


6. தோசைக்கல் சூடானதும் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மாவை சற்று கனமான அடைகளாக தட்டி சுற்றிலும் எண்ணெய் நெய் ஊற்றி இருபுறமும் சிவந்ததும் எடுக்கவும்.





சூடான வெங்காய அடை மட்டன் அல்லது சிக்கன் குழம்புடன் சாப்பிட சுவையாக இருக்கும்.




எங்கள் இல்ல திருமணங்களில் மாப்பிள்ளைக்கு செய்யும் பசியாற வகைகளில் இதுவும் ஒன்று.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes