தேவையான பொருட்கள் :
சேமியா - 1 கப்
பால் - 2 கப்
தண்ணீர் - 1 கப்
சீனி - 3/4 கப்
முந்திரி - 6
உலர்திராட்சை - 20
ஏலக்காய் - 2
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
குங்குமப்பூ - சிறிதளவு
செய்முறை :
1. பானில் நெய்யை விட்டு சூடானதும் முந்திரி, திராட்சையை பொரித்து எடுத்து கொள்ளவும்.
2. பின்பு அதே நெய்யில் உதிர்த்து வைத்த சேமியாவை சேர்த்து நன்கு சிவக்க வறுத்து கொள்ளவும்.
3. பாலில் தண்ணீர் சேர்த்து கலந்து கொதிக்க விடவும். கொதி வந்ததும் சேமியாவை சேர்த்து வேக விடவும்.
4. சேமியா வெந்து வரும்பொழுது சீனி, குங்குமப்பூ,
ஏலக்காயை சேர்த்து கலக்கவும்.
5. கடைசியாக வறுத்து வைத்த முந்திரி, திராட்சை சேர்த்து கலந்து விடவும்.
சுவையான சேமியா பாயசம் தயார்.
* சீனியின் அளவை உங்கள் ருசிக்கேற்ப கூட்டி கொள்ளலாம்.
* மில்க்மெய்ட் இருந்தால் கொஞ்சம் சேர்த்தாலும் சுவையாக இருக்கும்.














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...