தேவையான பொருட்கள் :
கோஸ் - 1/4 கிலோ
கேரட் - 1
வெங்காயம் - 1
வரமிளகாய் - 2
கடுகு - 1 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
சீரக தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - 3/4 ஸ்பூன்
துருவிய தேங்காய் - 1/4 கப்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
1.கோஸ், கேரட்டை மெல்லிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும் அல்லது க்ரேட்டரில் துருவி கொள்ளலாம். வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கி வைக்கவும்.
2. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
3. வெங்காயம் வதங்கியதும் கோஸ், கேரட்டை சேர்த்து வதக்கவும்.
4. பின்னர் தூள் வகைகள், உப்பு சேர்த்து நன்கு பிரட்டி விடவும். 1/4 கப் நீர் சேர்க்கவும்.
அனைத்து குழம்பு வகைகளுக்கும் பொருத்தமாக இருக்கும்.














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...