வரகு முட்டை சேமியா


வரகு முட்டை சேமியா 

தேவையான பொருட்கள் : 


வரகு சேமியா - 1 பாக்கெட் 

முட்டை - 1 
வெங்காயம் - 1 
முந்திரி - 5 
இஞ்சி - சிறு துண்டு 
கடுகு - 1 ஸ்பூன்  
உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன் 
வரமிளகாய் - 2
கறிவேப்பிலை - 1 கொத்து 
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன் 
மிளகு தூள் - 1 ஸ்பூன்
உப்பு - 1 ஸ்பூன் 
நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்  

செய்முறை : 

1. வெங்காயத்தை மெல்லியதாகவும், இஞ்சி, முந்திரியை சிறு துண்டுகளாகவும் நறுக்கி கொள்ளவும். 



2. ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீருடன் 3/4 ஸ்பூன் உப்பு சேர்த்து கலக்கி கொள்ளவும். அதில் வரகு சேமியாவை 2 நிமிடம் ஊற வைத்து இட்லிதட்டில் 8 நிமிடம் ஆவியில் வேக வைத்து எடுக்கவும். சேமியாவை உதிரிஉதிரியாக உதிர்த்து வைக்கவும்.






3. பானில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, வரமிளகாய், உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவும். 

4. பின்னர் வெங்காயம், இஞ்சி, முந்திரி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். 

5. வெங்காயம் வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து வதக்கி விட்டு முட்டையை உடைத்து ஊற்றி கொத்தி விடவும். 





6. முட்டை வெந்ததும் சேமியாவை அதில் சேர்த்து கிளறி விடவும். 






ஆரோக்கியமான எளிதில் செய்ய கூடிய சுவையான வரகு சேமியா தயார்.




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes