தேவையான பொருட்கள் :
நண்டு - 1/2 கிலோ
இறால் - 1 கப்
இஞ்சிபூண்டு விழுது - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய்ப்பால் - 1 கப்
உப்பு - 1 ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை :
1. நண்டு, இறாலை சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.
2. கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போனதும் நண்டு, இறால் சேர்த்து வதக்கவும்.
3. பின்னர் தூள் வகைகள், உப்பு சேர்த்து பிரட்டி விடவும்.
4. தேங்காய்ப்பால் சேர்த்து நன்கு கலந்து விட்டு மூடி போட்டு வேக விடவும்.
5. நண்டு வெந்து எண்ணெய் பிரிந்து வரும்பொழுது கறிவேப்பிலை சேர்த்து பிரட்டி விட்டு அடுப்பை அணைக்கவும்.
காரசாரமான நண்டு வறுவல் தயார்.
* காரம் அதிகமாக வேண்டுபவர்கள் மிளகாய்தூளின் அளவை அதிகரித்து கொள்ளலாம்.
* நண்டு மட்டும் சேர்த்து வறுவல் செய்யலாம். இறாலும் ஒரு கப் சேர்த்து செய்தால் சுவை கூடும்.














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...