வாழைக்காய் கறி


வாழைக்காய் கறி

தேவையான பொருட்கள் :


வாழைக்காய் - 2

வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
தக்காளி - 2
இஞ்சிபூண்டு விழுது - 1/4 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன் 
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
சோம்பு தூள் - 1/4 ஸ்பூன்
மல்லி தூள் - 1 ஸ்பூன் 
உப்பு - 3/4 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
தேங்காய்ப்பால் - 1/2 கப்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை : 


1. வாழைக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். வெங்காயம், தக்காளியை மெல்லியதாகவும் மிளகாயை நடுவில் கீறியும் வைக்கவும். 

2. பானில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், மிளகாய் சேர்த்து வதக்கவும். 



3. வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கி தக்காளி சேர்க்கவும். 





4.தக்காளி வதங்கியதும் வாழைக்காய் சேர்க்கவும். 




5. பின்னர் தூள் வகைகள், உப்பு சேர்த்து நன்கு பிரட்டி விட்டு பச்சை வாசம் போனதும் தேங்காய்ப்பால் சேர்த்து கலந்து விடவும். 






6. வாழைக்காய் வெந்து எண்ணெய் பிரிந்து வரும்பொழுது அடுப்பை அணைக்கவும். 






எளிதில் செய்ய கூடிய வாழைக்காய் கறி தயார். 

அனைத்து குழம்பு வகைகளுக்கும் பொருத்தமான தொடுகறியாக இருக்கும்.




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes