ப்ரீஸ்கூல் அனுபவங்கள் - 1



ப்ரீஸ்கூல் அனுபவங்கள் - 1

ஹாய் மக்களே...கிரிக்கெட்ல எல்லாம் பேக் டு ஃபார்ம்ன்னு சொல்ற மாதிரி நானும் இப்போ ப்ளாக்ல திரும்ப வந்துட்டேன். என்ன தமிழ் டைப்பிங் தான் கொஞ்சம் தடுமாறுது..அட்ஜஸ்ட் பண்ணிகோங்க ப்ளீஸ்..


 சிங்கையிலிருந்து இந்தியா வந்து ஒரு வழியாக செட்டில் ஆகி 3 வயது சுட்டி பெண்ணுடன் வாழ்க்கை ஒவ்வொரு நாளும் வேடிக்கையாகவும் விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது இருப்பினும் மனதின் ஒரம் ப்ளாக் ஆர்வம் குறையவில்லை.. 

எப்பொழுதும் சமையல் குறிப்புகளேயே பகிர்ந்து எனக்கும் ரொம்ப போர் அடித்து விட்டது. சரி இது போன்று பதிவுகள் எழுதினால் முன்பு போல் யாராவது நட்புகள் வந்து கருத்து சொன்னால் நமக்கும் உற்சாகமாய் இருக்கும். 

இப்பொழுது கொஞ்சம் பார்வையாளர்கள் எனது ப்ளாகிற்கும் (!!!) பார்வையிடுவதால் நம்பிக்கையுடன் எழுதுகிறேன். 

சரி இப்போ தலைப்பிற்க்கு வருவோம். எனது பெண்ணிற்கு 3 வயது ஆனதும் ப்ளேஸ்கூல் சேர்க்க முடிவு செய்தோம். 

அப்பொழுது தான் 6 மாதங்களில் ஸ்கூலில் சேர்க்கும் பொழுது வசதியாக இருக்கும். குழந்தையும் ஒரளவிற்கு பழகி விடுவாள் என்று சொல்லி எனது தந்தையையும், ரங்ஸையும் சரி பண்ணி வைத்தேன். 

இருவரும் சொல்லி வைத்தது போல் இன்னும் 6 மாதம் தானே வீட்டில் இருக்கட்டுமே என்று சொல்லி கொண்டு இருந்தார்கள்.ஆனால் எனது பெண்ணின் அளவுக்கு அதிகமான குறும்புதனங்களால் ஒருவாறு ஒப்புக்கொண்டனர்.

நாங்கள் வசிப்பது ஒரு சிறு நகரம். அங்கும் சர்வே செய்து பார்த்ததில் 4, 5 ப்ரீஸ்கூல் இருந்தது. 

சரி என்று ஒரு நாள் எனது மகளையும் தந்தையையும் அழைத்து கொண்டு ஒரு ப்ரீஸ்கூல் சென்றோம். எனது வீட்டில் இருந்து 3 கிலோமீட்டர் அருகில் இருந்தது. உள்ளே சென்று பார்த்ததும் மனசுக்கு பிடித்தும் இருந்தது. 

அதற்கு முக்கிய காரணம் எனது மகள் மிகவும் தெரிந்த இடம் போல் விளையாட ஆரம்பித்து விட்டாள்.    

அதன் உரிமையாளரும் நன்றாக பேசினார். இங்கு மிகவும் சுத்தமாக வைத்திருப்போம். ஜூனியர் கேஜி அளவிற்கு தயார் செய்து விடுவோம் என்று ( நாம் படித்த எல்கேஜி தான் அது) கூறினார்.

தினமும் அனுப்ப வேண்டிய ஸ்னாக்ஸ், டயாப்பர், இரண்டு டவல்கள், ஒரு மாற்று ஆடை, வெட் டிஸ்யு என்று ஒரு லிஸ்ட் சொன்னார்கள். 

அதிலும் குறிப்பாக பழங்கள், சுண்டல் வகைகள் தான் ஸ்னாக்ஸாக அனுப்ப வேண்டும் என்று எல்லாம் சொன்னார்கள். நானும் இங்கு சேர்த்தாலாவது என் மகள் பழம் சாப்பிட பழகட்டும் என்று கற்பனை கோட்டையே கட்டி விட்டேன்.

தினமும் 2 மணி நேரம் தான்.அதுவும் குழந்தை ரொம்ப அழுதால் அழைத்து கொண்டு விட வேண்டுமாம். 

சரி இறுதியாக எவ்வளவு ஃபீஸ் என்றதும் நாங்கள் ஆறு மாதத்திற்கு 21,000 வாங்குகின்றோம். நீங்கள் ஜனவரியில் சேர்க்க வந்துள்ளதால் 15,000 கட்டி விடுங்கள் என்று சொன்னார்கள். 

அதிலும் ஜனவரியில் பொங்கல் விடுமுறைக்காக ஒரு வாரம் கிடையாதாம். ஏப்ரல், மே இரு மாதங்கள் விடுமுறை. சரியாக பார்த்தால் இரண்டரை மாதங்களுக்கு 15,000 என்று சொல்லி இப்பொழுதே 5000 கட்டி விடுங்கள் என்று சொன்னார்கள். 

எனக்கு சுத்தமாக புரியவில்லை இந்த தொகை எனக்கு மட்டும் தான் அதிகமாக தெரிகிறதா இல்லை இது நடைமுறை வழக்கம் தானா என்று. 

சென்னை போன்ற பெருநகரங்களில் ஃபீஸ் அதிகமாக இருக்கும் என்று தெரியும். எங்கள் ஊருக்கு இது சற்று அதிகமாக இருந்தது.  

கணவரிடம் ஆலோசித்து விட்டு வருவதாக போன் நம்பர் மட்டும் தந்து விட்டு கிளம்பினோம். ஒருவழியாக அங்கிருந்து தப்பித்து அடுத்த ப்ரீஸ்கூல் சென்றோம். 

அதில் வேறொரு வி அனுபவம்.பதிவின் நீளம் கருதி அடுத்த பகுதியில் பார்க்கலாம். 

எனது புலம்பலை பொறுமையாக படித்ததற்க்கு மிகவும் நன்றி...

அடுத்த பதிவில் ந்திப்போம்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes