தேவையான பொருட்கள் :
உருளைக்கிழங்கு - 2
சிக்கன் 65 மசாலா - 2 ஸ்பூன்
உப்பு - 1/2 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 2 இணுக்கு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
2.கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
3.பின் கிழங்கை சேர்த்து நன்கு வதக்கவும்.சில்லி சிக்கன் மசாலா சேர்த்து பிரட்டி மூடி போட்டு வேக விடவும்.தண்ணீர் சேர்க்க வேண்டாம்.
4.உருளைக்கிழங்கு வெந்து எண்ணெய் பிரிந்து வரும் பொழுது இறக்கவும்.
10 நிமிடத்திற்குள் செய்து விடலாம். சிக்கன் 65 மணத்துடன் உருளை ஃப்ரை வித்தியாசமான சுவையில் இருக்கும்.என்னிடம் சிக்கன் 65 மசாலா ஊரில் இருந்து எடுத்து வந்தது அதிகம் இருந்தது. இப்படி காலி செய்து விட்டேன்.
என்னவரும் வித்தியாசமாக இருக்கு என்று பாராட்டினார்.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...