அவரைக்காய் பொரியல்




அவரைக்காய் பொரியல்

தேவையான பொருட்கள் :


அவரைக்காய் - 1/4 கிலோ

வெங்காயம் - 1
வரமிளகாய் - 2
கடுகு - 1 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன் 
கறிவேப்பிலை - 1 கொத்து
சோம்பு தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - 3/4 ஸ்பூன்
துருவிய தேங்காய் - 1/4 கப்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை : 


1.அவரைக்காய் மெல்லிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கி வைக்கவும். தேங்காயுடன் ஒரு வரமிளகாய் சேர்த்து மிக்சியில் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.






2. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.




3. வெங்காயம் வதங்கியதும் அவரைக்காய் சேர்த்து வதக்கவும். 

4. பின்னர் சோம்பு தூள், உப்பு சேர்த்து நன்கு பிரட்டி விடவும். 1/4 கப் நீர் சேர்க்கவும். 




5. அவரைக்காய் வெந்து நீர் வற்றியதும் அரைத்த தேங்காயை சேர்த்து கலந்து விட்டு அடுப்பை அணைக்கவும்.



சுலபமாக செய்ய கூடிய அவரைக்காய் பொரியல் ரெடி.


அனைத்து குழம்பு வகைகளுக்கும் பொருத்தமாக இருக்கும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes