ப்ரெட் மசாலா


ப்ரெட் மசாலா

தேவையான பொருட்கள் : 

ப்ரெட் - 6 ஸ்லைஸ் 
முட்டை - 1 
வெங்காயம் - 2 
தக்காளி - 1
கேரட் - 1 
இஞ்சிபூண்டு விழுது - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன் 
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - 1/2 ஸ்பூன் 
சீரகம் - 1/2 ஸ்பூன் 
கறிவேப்பிலை - 1 கொத்து 
புதினா - சிறிது 
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் 

செய்முறை : 

1. ப்ரெட்டை சதுர துண்டுகளாக நறுக்கி வைக்கவும். வெங்காயம், தக்காளி, கேரட்டை மெல்லியதாக நறுக்கி கொள்ளவும்.

2. பானில் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம் தாளித்து வெங்காயம், கேரட், தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். 



3. வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு விழுது, உப்பு சேர்த்து வதக்கவும்.




4. பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து பிரட்டி விட்டு பச்சை வாசம் போனதும் 1/4 கப் நீர் சேர்க்கவும். 



5. பின்னர் நறுக்கிய ப்ரெட் துண்டுகளை சேர்த்து நன்கு பிரட்டி விடவும். 





6. அதே பானில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி கொத்தி விடவும். 





7. கடைசியாக மிளகு தூள், புதினா சேர்த்து ப்ரெட்டுடன் கலந்து விடவும். 





10 நிமிடத்தில் செய்ய கூடிய சுவையான டிபன் தயார். 

விரும்பினால் ப்ரெட் மசாலாவுடன் எலுமிச்சை சாறு பிழிந்து கொண்டாலும் நன்றாக இருக்கும்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes