வெண்டைக்காய் பச்சடி




வெண்டைக்காய் பச்சடி

தேவையான பொருட்கள் :

வெண்டைக்காய் - 150 கிராம்
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
இஞ்சிபூண்டு விழுது - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
மல்லி தூள் - 1/2 ஸ்பூன்
சீரக தூள் - 1/2 ஸ்பூன்
தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
புளி - நெல்லிக்காய் அளவு
கடுகு - 1/2 ஸ்பூன்
வரமிளகாய் - 2
கறிவேப்பில்லை - 1 கொத்து
உப்பு - 1 ஸ்பூன்
சீனி - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
மல்லிதழை - சிறிது

செய்முறை:

1. வெண்டைக்காயை ஒரு இஞ்ச் அளவிற்கு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். வெண்டைக்காயின் மேற்பகுதியில் நான்காக பிளந்து கொள்ளவும். 
2. வெங்காயம், தக்காளியை மெல்லியதாக நறுக்கி கொள்ளவும்.பச்சை மிளகாயை நடுவில் கீறி வைக்கவும்.
3. அடுப்பில் கடாயை வைத்து 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் வெண்டைக்காயை 5 நிமிடம் வதக்கி எடுத்து கொள்ளவும்.



4. பின்னர் அதே கடாயில் மீதமுள்ள எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.



4. வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.


5. பிறகு தக்காளி, இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.




6. வெண்டைக்காய் துண்டுகளை அதில் சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.



7. தூள் வகைகள், உப்பு, தயிர் சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.






8. புளி தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து விட்டு
வெண்டைக்காயை வேக விடவும். 




9. வெண்டைக்காய் வெந்து எண்ணெய் பிரிந்து வரும் சமயம் சீனியை சேர்த்து நன்கு பிரட்டி விட்டு மல்லிதழை தூவி பரிமாறவும்.




புளிப்பும் இனிப்பும் கலந்த சுவையான வெண்டைக்காய் பச்சடி தயார்...



இதனை திருமண விருந்துகளிலும், விஷேஷங்களிலும் பிரியாணி, நெய் சோறு இவற்றிற்க்கு சைட் டிஷ் ஆக இடம்பெறும்...

எனது சுட்டி பெண்ணின் ஆசைக்காக அவளது டக்கையும் வைத்து ஒரு ஃபோட்டோ. 







0 கருத்துகள்:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes