அவல் உப்புமா



இந்த குறிப்பு இணையத்தில் பார்த்து முயற்சித்த குறிப்பு தான். 
சுவை எனக்கு மிகவும் பிடித்து போகவே இங்கு பகிர்கிறேன். 

சிவப்பு அவலின் நன்மைகள் : (நன்றி கூகுள்)

1. உடல் எடையை குறைக்கும். 
2. நீண்ட நேரம் பசி தாங்கும்.
3. புற்று நோய் வராமல் தடுக்கும். 
4. கொழுப்பை குறைக்கும். 
5. இரத்தசோகை வராமல் தடுக்கும்.
6. இதயத்திற்கு நல்லது. 

அவல் உப்புமா 

தேவையான பொருட்கள் : 

சிவப்பு அவல் - 1 கப் 
வெங்காயம் (சிறியது) - 1 
பச்சை மிளகாய் - 1 
தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன் 
முந்திரி - 6
இஞ்சி - சிறிய துண்டு 
கடுகு - 1 ஸ்பூன் 
வரமிளகாய் - 2 
கறிவேப்பிலை - 1 கொத்து 
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்  
உப்பு - 1/2 ஸ்பூன்

செய்முறை :  

1. சிவப்பு அவலை இரண்டு முறை நீரில் அலசி 5 நிமிடம் மூடி போட்டு வைக்கவும். 


2. மிக்சியில் தேங்காயுடன் பச்சை மிளகாய் சேர்த்து ஒரு சுற்று சுற்றி கொள்ளவும். வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கி வைக்கவும். 
3. முந்திரி, இஞ்சியை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். 
4. ஊறிய அவலுடன் தேங்காய், உப்பு சேர்த்து பிசிறி வைக்கவும்.


5. பானில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். 



6. வெங்காயம் வதங்கியதும் முந்திரி, இஞ்சி சேர்த்து வதக்கி பின்னர் அவலை சேர்க்கவும்.



7. அவல் பொலபொலவென்று வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும். 



10 நிமிடத்தில் சுவையான அவல் உப்புமா தயார்.

சூடாக சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.  




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes