தேவையான பொருட்கள் :
தினை சேமியா - 1 பாக்கெட்
வெங்காயம் - 1
தக்காளி - 1
முந்திரி - 6
இஞ்சி - சிறு துண்டு
கடுகு - 1/2 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன்
வரமிளகாய் - 2
கறிவேப்பிலை - 1 கொத்து
தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
சீரக தூள் - 1/4 ஸ்பூன்
உப்பு - 1 ஸ்பூன்
நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
புதினா - சிறிதளவு
செய்முறை :
1. வெங்காயம், தக்காளியை மெல்லியதாகவும், இஞ்சி, முந்திரியை சிறு துண்டுகளாகவும் நறுக்கி கொள்ளவும்.
2. ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீருடன் 3/4 ஸ்பூன் உப்பு சேர்த்து கலக்கி கொள்ளவும். அதில் தினை சேமியாவை 2 நிமிடம் ஊற வைத்து இட்லிதட்டில் 8 நிமிடம் ஆவியில் வேக வைத்து எடுக்கவும். சேமியாவை உதிரிஉதிரியாக உதிர்த்து வைக்கவும்.
3. பானில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, வரமிளகாய், உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
4. பின்னர் வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். 1/4 ஸ்பூன் உப்பு சேர்க்கவும்.
5. வெங்காயம் வதங்கியதும் முந்திரி, இஞ்சி துண்டுகள் சேர்த்து வதக்கவும்.
6. தூள் வகைகள் சேர்த்து கலந்து விடவும். பின்னர் வேக வைத்த தினை சேமியாவை சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.
6. தூள் வகைகள் சேர்த்து கலந்து விடவும். பின்னர் வேக வைத்த தினை சேமியாவை சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.
ஆரோக்கியமான எளிதில் செய்ய கூடிய சுவையான ஸ்பைசி தினை சேமியா தயார்.




















0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...