சிக்கன் கேஷு மசாலா
தேவையான பொருட்கள் :
சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2
புதினா - 1/2 கப்
இஞ்சிபூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 20
வெள்ளை மிளகு - 1 ஸ்பூன்
சீரக தூள் - 1 ஸ்பூன்
மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - 3/4 ஸ்பூன்
நெய் - 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
1. சிக்கனை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். முந்திரியை விழுதாக அரைத்து கொள்ளவும். வெங்காயம், தக்காளியை மெல்லியதாக நறுக்கி வைக்கவும்.
2. பானில் நெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
3. வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு விழுது, உப்பு சேர்த்து பச்சை வாசம் போனதும் தக்காளி, புதினா சேர்க்கவும்.
4. சிக்கனை சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.
5. தூள் வகைகள் சேர்த்து மசாலா வாசம் போனதும் முந்திரி விழுது சேர்த்து கலந்து விடவும்.
6. சிக்கன் வெந்து மசாலாவில் எண்ணெய் பிரிந்து வரும் பொழுது இறக்கவும்.














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...