தேவையான பொருட்கள் :
பீட்ருட் - 1
வெங்காயம் - 1வரமிளகாய் - 2
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
சாம்பார் பொடி - 1/2 ஸ்பூன்
உப்பு - 3/4 ஸ்பூன்எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
1.பீட்ருட்டை மெல்லிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும் அல்லது க்ரேட்டரில் துருவி கொள்ளலாம்.வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கி வைக்கவும்.
2. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும்.
3. பின்னர் பீட்ருட், தூள் வகைகள் சேர்த்து 1/4 கப் நீர் சேர்த்து வேக விடவும்.
4. பீட்ருட் வெந்ததும் தேங்காயை தூவி பிரட்டி 2 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.












0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...