தேவையான பொருட்கள் :
காலிஃப்ளவர் (சிறியது) - 1
வெங்காயம் - 1
இஞ்சிபூண்டு விழுது - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகு தூள் - 1 ஸ்பூன்
கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
உப்பு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
1. காலிஃப்ளவரை சிறு பூக்களாக பிரித்துக் கொள்ளவும். அதனை மஞ்சள் தூள், உப்பு கலந்த சுடுநீரில் 10 நிமிடம் போட்டு வடிகட்டி வைக்கவும். பூச்சி எதுவும் இருந்தால் வந்து விடும்.
2. வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். காலிஃப்ளவருடன்ன் இஞ்சிபூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, தயிர், கடலை மாவு சேர்த்து பிசிறி வைக்கவும்.
3. பானில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
4. வெங்காயம் வதங்கியதும் காலிஃப்ளவர் கலவையை சேர்த்து வதக்கவும்..
பிரட்டி விட்டு 5 நிமிடம் வேக விடவும்.
6. எண்ணெய் பிரிந்து வரும் பொழுது அடுப்பை அணைக்கவும்.
சுவையான காலிப்ளவர் பொரியல் தயார்.
அனைத்து சாத வகைகளுக்கும் தொடுகறியாக சாப்பிடலாம். சப்பாத்தியுடன் சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும்.












0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...