பச்சை பட்டாணி க்ரேவி
தேவையான பொருட்கள் :
பச்சை பட்டாணி - 1 கப்
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சிபூண்டு விழுது - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
சீரக தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - 3/4 ஸ்பூன்
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
சோம்பு - 1/2 ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
புதினா - சிறிதளவு
செய்முறை :
1. வெங்காயம், தக்காளியை மெல்லியதாக அரிந்து கொள்ளவும். மிளகாயை நடுவில் கீறி வைக்கவும்.
2. பானில் எண்ணெய் விட்டு சூடானதும் சோம்பு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும்.
3. வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போனதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
4. பின்னர் தூள் வகைகள் சேர்க்கவும். தூள் வாசம் போனதும் பச்சை பட்டாணியை சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.
5. பட்டாணி மசாலாவுடன் தயிர் சேர்க்கவும். 1/2 கப் தண்ணீர் சேர்த்து கலந்து விடவும். பட்டாணி வெந்து தண்ணீர் சுண்டியதும் புதினா தூவி பிரட்டி விடவும்.
எளிதில் செய்ய கூடிய ருசியான பச்சை பட்டாணி க்ரேவி தயார்.
சப்பாத்தி, ப்ரெட்டுடன் சேர்ந்து சாப்பிட சுவையாக இருக்கும்.




















0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...