பட்டாணி குருமா


 பட்டாணி குருமா

தேவையான பொருட்கள்:


வெங்காயம் - 2
தக்காளி - 3
பட்டாணி - 1 கப்
உருளை - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சிபூண்டு விழுது - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
சீரக தூள் - 1/2 ஸ்பூன்
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - 1 ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 1
சோம்பு - 1 ஸ்பூன்
மல்லிதழை - சிறிது
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை : 

 1. பட்டாணியை 7 மணி நேரம் ஊற வைத்து அதனுடன் உருளையை சிறு துண்டுகளாக நறுக்கி குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேக விடவும்.

 2. வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கி கொள்ளவும். மிளகாயை நடுவில் கீறி வைக்கவும். தக்காளியை மிக்சியில் விழுதாக அரைத்து கொள்ளவும்.

3. அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு சேர்த்து தாளித்து வெங்காயம், மிளகாய் சேர்த்து வதக்கவும்.





4. பின்னர் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். அதனுடன் வேக வைத்த பட்டாணி, உருளையை சேர்க்கவும்.





5. தூள் வகைகள், உப்பு சேர்த்து பிரட்டிவிடவும். அரைத்து வைத்த தக்காளி விழுதை சேர்க்கவும்.







6. அத்துடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கலந்து குக்கரில் ஒரு விசில் வைக்கவும்.



7. குருமா எண்ணெய் பிரிந்து வந்ததும் மல்லிதழை தூவி விடவும்.




 சுவையான எளிதில் செய்யகூடிய பட்டாணி குருமா தயார்..




சப்பாத்தி, பரோட்டா, இடியாப்பம் உடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

* ஃப்ரோசன் பட்டாணி பயன்படுத்தினால் வேக வைக்க தேவை இல்லை.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes