மஷ்ரூம் மிளகு வறுவல்

 மஷ்ரூம் மிளகு வறுவல்


தேவையான பொருட்கள் :

மஷ்ரூம் - 1 பாக்கெட்

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 1

இஞ்சிபூண்டு விழுது - 2 ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன் 

மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

மிளகு தூள் - 1 ஸ்பூன்

சீரக தூள் - 1/2 ஸ்பூன்

உப்பு - 3/4 ஸ்பூன் 

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் 

கறிவேப்பிலை - 1 கொத்து    

செய்முறை :

* மஷ்ருமை சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும். 


* பானில்எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும்.


*இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போனதும் மஷ்ரூம் சேர்த்து வதக்கவும். 





* பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரக தூள் சேர்த்து பிரட்டி விடவும். 




 * மசாலா வாசம் போனதும் மூடி போட்டு வேக விடவும். தண்ணீர் சேர்க்க
    தேவையில்லை.




மஷ்ரூம் வெந்து வரும்பொழுது மிளகு தூள், கறிவேப்பிலை சேர்த்து பிரட்டி விட்டு எண்ணெய் பிரிந்து வரும்பொழுது அடுப்பை அணைக்கவும்.   



 * சுவையான மஷ்ரூம் மிளகு வறுவல் தயார். 



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes