உருளை பட்டாணி கறி

 உருளை பட்டாணி கறி

தேவையான பொருட்கள் :

உருளை - 2

பட்டாணி - 1/2 கப்

வெங்காயம் - 1

தக்காளி - 1

பச்சை மிளகாய் - 2

இஞ்சிபூண்டு விழுது - 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன் 

மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

மிளகு தூள் - 1/2 ஸ்பூன்

சீரக தூள் - 1/2 ஸ்பூன்

உப்பு - 3/4 ஸ்பூன் 

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் 

கடுகு - 1/2 ஸ்பூன்

கடலைபருப்பு - 1 ஸ்பூன்

கறிவேப்பிலை - 1 கொத்து    

புதினா - சிறிதளவு

செய்முறை :

1. உருளையை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பட்டாணியை அலசி வைத்து கொள்ளவும்.


2. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைபருப்பு சேர்த்து தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.




3. வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்க்கவும். பின்னர் இஞ்சிபூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். உருளை பட்டாணியை சேர்த்து
 கலந்து விடவும்.




4. தூள் வகைகள் சேர்த்து பச்சை வாசம் போனதும்   சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும்.




5. உருளை வெந்ததும் புதினா மிளகு தூள் தூவி இறக்கவும்.



சுவையான உருளை பட்டாணி கறி தயார்.
















0 கருத்துகள்:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes