தேவையான பொருட்கள் :
காலிஃப்ளவர் (சிறியது) - 1
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 1
தக்காளி - 1
முட்டை - 1
இஞ்சிபூண்டு விழுது - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
சீரக தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - 1 ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி தழை - சிறிது
செய்முறை :
1. காலிஃப்ளவரை சிறு பூக்களாக பிரித்துக் கொள்ளவும். அதனை உப்பு கலந்த சுடுநீரில் 10 நிமிடம் போட்டு வடிகட்டி வைக்கவும். பூச்சி எதுவும் இருந்தால் வந்து விடும்.
2. வெங்காயம், தக்காளியை மெல்லியதாக அரிந்து கொள்ளவும். மிளகாயை நடுவில் கீறி வைக்கவும்.
3. பானில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், தக்காளி, மிளகாய் சேர்த்து வதக்கவும்.
4. வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
5. பின்னர் காலிஃப்ளவர், தூள் வகைகள், உப்பு சேர்த்து பிரட்டி விட்டு 1/2 கப் தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
7. முட்டை வெந்ததும் அடுப்பை அணைத்து மல்லிதழை தூவி பரிமாறவும்.
சுவையான காலிஃப்ளவர் முட்டை மசாலா தயார்.
சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.


















0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...